டத்தோஸ்ரீ அன்வாருக்கு நிபோங் திபால் தொகுதி பிகேஆர் முழு ஆதரவு

0

பிகேஆர் கட்சியிலிருந்து வெளியேறியிருக்கும் நிபோங் திபால் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ மன்சோர் ஒஸ்மான் விட்டுச் சென்றப் பணிகள் தொடரப்படும்.
கடந்த பொதுத்தேர்தலில் இத்தொகுதி மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை தாம் நிறைவேற்றி வைக்கப்போவதாகதொகுதிக்கு இடைக்காலத் தலைவராக பொறுப்பேற்றுள்ள டாக்டர் அமார் பிரிட்பால் அப்துல்லா கூறினார்.
பொதுத்தேர்தல் வாக்குறுதி களை வெறுமனே ஒதுக்கி விடாமல்,மாநிலத்திலுள்ள ஜசெக,அமானா ஆகிய கட்சிகளுடன் இணைந்து சேவையாற்றுவதோடு, மாநிலத்தில் கெஅடிலான் கட்சியை வலுப்படுத்துவோம் என தெரிவித்தார்.
பினாங்கு மக்கள் எதிர் நோக்கி வரும் மக்கள் வீடமைப்பு ,இளைஞர்கள்,மகளிர்,மூத்த குடிமக்கள்,மற்றும் போதைப் பொருள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும்.மேலும் விவசாயிகள்,வணிகர்கள்,சிறிய வியாபாரிகள், தனியார், அரசாங்க ஊழியர்களின் மேம் பாட்டுக்கும் கட்சி தொடர்ந்து பாடுபடுமென சுங்கை பாக்காப் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் அமார் பிரிட்பால் கூறினார்.
அன்று தொட்டு இன்று இன்று வரையில் கடந்த 20 ஆண்டுகளாக பிகேஆர் கட்சிக்கும்,அதன் தேசியத் தலைவரும் போர்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ அன்வாருக்கும் விசுவாசமாக இருந்து வருகிறோம்.ஆகையால் மாநிலம் மற்றும் தேசிய நிலை தலைமைத்துவத்துக்கும் எங்களின் பிளவுபடாத ஆதரவை வழங்குவோம் என்றார். நேற்று முன்தினம் நிபோங் திபால் தொகுதி பிகேஆர் உறுப்பினர்கள் மற்றும் தொகுதி செயலவை உறுப்பினர்கள் ஒன்று கூடிய ஆதரவு தெரிவிக்கும் நிகழ்வில் இந்த உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − 12 =