ஜோலோ உட்பட மூவருக்கு எதிராக கைது வாரண்ட்

1எம்டிபி நிதி ஊழல் தொடர்பாக சர்ச்சைக்குரிய வர்த்தகக் கோடீஸ்வரர் ஜோலோ, தாரேக் ஒபாய்ட், பட்ரிக் மஹோனி ஆகிய மூவருக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கைது வாரண்டைப் பிறப்பித்துள்ளது.
மேலும் இந்த கைது வாரண்ட் குறித்து அனைத்துலக போலீஸுக்கும் (இண்டர்போல்) எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளதாக எம்ஏசிசியின் தலைமை ஆணையர் லத்தீபா கோயா கூறினார்.
1எம்டிபி மற்றும் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கு விசாரணைக்காகவும் பணத்தை மீட்கவும் இந்த கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நேற்று காலை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் 1எம்டிபி பணச்சலவை வழக்குத் தொடர்பாக இந்த மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப் பட்டது.
இந்த மூவரும் நீதிமன்றத் திற்கு வராமல் தலைமறைவாக இருந்து வருவதால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen + twenty =