ஜோலோவின் கடப்பிதழ் ரத்து செய்யப்படலாம்

0

தலைமறைவாக இருந்து வரும் சர்ச்சைக்குரிய வர்த்தகக் கோடீஸ்வரர் ஜோலோவிற்கு விநியோகிக்கப்பட்ட கடப்பிதழ் ரத்து செய்யப்படவேண்டும் என சைப்ரஸ் அதிபர் நிக்கோல் அனாஸ்தாசியாடெஸ் கோடி காட்டியுள்ளார்.
ஜோலோவின் கடப்பிதழ் ரத்து செய்யப்படுவதை நியாயப்படுத்த முதலில் ஒரு விசாரணை நடத்தப்படவேண்டும் என்றார் அவர்.
1எம்டிபி ஊழலில் தொடர்பு இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டும் ஜோலோவிற்கு சைப்ரஸ் நாட்டு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி பற்றி கருத்துரைத்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சைப்ரஸ் நாட்டு குடியுரிமை வழங்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு. இது போன்ற அதிகமான சம்பவங்கள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என பதிலளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + five =