ஜொகூர் வெள்ளம்: வெள்ள நிவாரண முகாம்களில் 475 பேர்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு ஜொகூர் நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது.
நேற்று காலை 8.00 மணி நிலவரப்படி 115 குடும்பங்களைச் சேர்ந்த 475 பேர் வெள்ள நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்து இருந்தனர் என்ற மாநில சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் செயற்குழுவின் தலைவர் ஆர். வித்யானந்தன் நேற்று முன்தினம் 143 குடும்பங்களைச் சேர்ந்த 575 பேர் இங்கு இருந்தனர் என்றார்.
மூவாரில் 53 குடும்பங்களைச் சேர்ந்த 197 பேரும் தொடர்ந்து பத்து பஹாட்டில் 34 குடும்பங்களைச் சேர்ந்த 158 பேரும் பொந்தியானில் 28 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேரும் வெள்ள நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.
நேற்றைய நிலவரப்படி 3 வட்டாரங்களில் தற்காலிக வெள்ள நிவாரண முகாம்களில் செயல்பாட்டில் இருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × three =