ஜொகூர் மாநில இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மஇகாவினருக்கா?

    ஜொகூர் மாநில சட்டமன்ற கூட்டத் தொடரில் திராம் சட்டமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் ஜொகூர் மாநில இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்ட 4 மில்லியன் நிதி மஇகா இந்தியர்களுக்கா? அல்லது ஒட்டு மொத்த இந்தியர்களுக்கா? என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், சமீபத்தில் தன்னுடைய அலுவலகத்திலிருந்து மிகவும் சிரமப்படும் குடும்பங்கள் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் 142 குடும்பங்களுக்கு இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து உதவி கோரி விண்ணப்பித்திருந் ததாகவும் பிறகு ஒருவருக்கும் கிடைக்காமல் அனைத்தும் நிராகரிக் கப்பட்டதாக அவர் வேதனையுடன் தெரிவித்தார். மேலும் கருத்துரைத்த அவர், தனக்கு கிடைத்த தகவலின் படி ஒதுக்கப்பட்ட இந்த நிதியிலிருந்து மஇகா தொகுதி தலைவர்களுக்கும் கிளைத் தலைவர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை மஇகா வழங்கியிருப்பதாக அவர் கூறினார். மேலும் இந்த நிதி கட்சிக்கு கொடுக்கப்பட்டதா அல்லது தனி நபருக்கு கொடுக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பினார். ஜொகூர் மாநில இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்த நிதியை சிரமப்படும் குடும்பங்களுக்கு அவர்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக இருக்க வேண்டும் என கோபாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார். இதற்கு முன்னதாக அவர் நாட்டில் கட்டுக்கடங்காமல் நிலவி வரும் கோவிட்-19 தொற்று பரவல் குறித்து தன்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார்.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    sixteen + 5 =