ஜொகூர் மாநில அரசாங்கத்தை மீட்டெடுக்க பக்காத்தான் தயார்

ஜொகூர் மாநில அரசாங்கத்தை மீட்டெடுக்க பக்காத்தான் ஹராப்பான் தயாராக இருப்பதாக மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அமினோல்ஹுடா ஹஸான் தெரிவித்தார்.
ஜொகூர் மாநில ஆட்சிக்குழு ஒன்றை உருவாக்குவதோடு புதிய மந்திரி பெசாரையும் மிக விரைவில் நாங்கள் தேர்வு செய்வோம். இதற்கான ஏற்பாடுகள் முறையாகச் செய்யப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
தற்போது ஜொகூர் மாநில மந்திரி பெசார் பதவிக்கு இருவரின் பெயர்கள் பரிசீலனையில் இருக்கிறது என்று பாரிட் யானி சட்டமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
ஜொகூர் மாநிலத்தில் உள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளில் 29 தொகுதிகளை பெரிக்காத்தான் நேஷனலும் 27 தொகுதிகளை பக்காத்தான் ஹராப்பானும் கொண்டிருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − four =