ஜொகூர் மாநிலத்தில் காடு எரிப்புச் சம்பவங்கள் உயர்வு

அண்மையில் மேற்கொண்ட ஆய்வின்படி நாடுதழுவிய அளவில் 1,433 திறந்தவெளி காடு எரிக்கும் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் ஜொகூர் மாநிலத்திலேயே அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.


அம்மாநிலத்தில் மட்டும் மொத்தம் 580 காடு எரிப்புச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை துணையமைச்சர் செனட்டர் டத்தோ ராஜா கமாருல் பாஹ்ரின் ஷா தெரிவித்தார்.


ஜொகூர் மாநிலத்தை அடுத்து சிலாங்கூர் மாநிலத்தில் 226 சம்பவங்களும் சபா, சரவா மாநிலங்களில் முறையே 193, 179 சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான காடு எரிப்புச் சம்பவங்கள் திறந்த வெளியில் குப்பைகளை எரிக்கும் போதும் பயன்படுத்தப்படாத வயல்களில் தீமூட்டும் போதும் நிகழ்கின்றன.


இந்த காடு எரிப்புச் சம்பவங்களைத் தவிர்க்கும் வகையில் தீயணைப்பு மீட்புப் படையினர் பல்வேறு வகையான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் முகாம்களையும் மேற்கொண்டு வந்தாலும், இன்னும் காடு எரிப்புச் சம்பவங்கள் குறைந்தபாடில்லை என்று மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 + 5 =