ஜொகூர் மலேசிய முப்படை இந்திய இராணுவ சங்க முயற்சியில் திருப்பதிக்கு குடியுரிமை

பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் இலாகாவின் இந்திய சமூக பொருளாதார சிறப்பு பிரிவின் (செடிக்) ஆதரவுடன் ஜொகூர் மலேசிய முப்படை இந்திய இராணுவ வீரர்கள் சங்கம் மேற்கொண்ட தொடர் முயற்சியால் குளுவாங், தாமான் இம்பியானைச் சேர்ந்த ஆர். திருப்பதி (வயது 87) என்பவர் குடியுரிமை அந்தஸ்து கிடைக்கப் பெற்றார்.


நேற்று முன்தினம் புதன்கிழமை அன்று குளுவாங் மாவட்ட தேசிய பதிவு இலாகா அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஜொகூர் மலேசிய முப்படை இந்திய இராணுவ முன்னாள் வீரர்கள் சங்கத்தின் தேசிய பதிவு இலாகா நடவடிகைக் குழுப் பொறுப்பாளர் முனியாண்டி சுப்பிரமணியம் இதனை பெற்றுத் தந்தார். உடல் நலக்குறைவால் திருப்பதி வர இயலாத நிலையில் அவரின் மகன் ஹரிதாஸ் தமது தந்தையாரின் சார்பில் குடியுரிமைப் பத்திரத்தை பெற்றுக் கொண்டார்.


ஏறக்குறைய 50 ஆண்டு காலமாக குடியுரிமை பெறுவதற்கு காத்திருந்த தனது தந்தையாருக்கு 2017ஆம் ஆண்டில் முப்படை வீரர்கள் சங்கம் மேற்கொண்ட பதிவு நடவடிக்கையின்போது மனு செய்ததின் வாயிலாக மலேசிய குடி
யுரிமை பெற வேண்டும் எனும் தமது நீண்ட நாளைய கனவு நனவாகி யதாக ஹரிதாஸ் குறிப்பிட்டார். மேலும் இதற்கான முயற்சியை மேற் கொண்ட முப்படை வீரர்கள் சங்கத்தின் பொறுப்பாளர் சு.முனியாண்டி, இதனை தக்க தருணத்தில் அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டுச்
சென்று உதவிய செடிக் அமைப்பிற் கும் தமது தந்தையாரின் மனுவை அங்கீகரித்த அரசாங்கத்திற்கும் நன்றியினை தெரிவித்துக் கொள் வதாகவும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two + 12 =