ஜொகூர் பெர்சத்து தொகுதிகள் மகாதீருக்கு ஆதரவு

ஜொகூரில் இருக்கும் பாதிக்கும் மேற்பட்ட பிரிபூமி பெர்சத்து தொகுதிகள் துன் மகாதீரை கட்சியின் தலைவராகவும் பிரதமராகவும் நியமிக்கப்பட ஆதரவு தெரிவித்துள்ளன.

ஜொகூர் பெர்சத்து சட்டமன்ற உறுப்பினர்கள் தேசிய முன்னணி மற்றும் பாஸ் உறுப்பினர்களும் கூட்டுச் சேர்ந்து ஆட்சியை அமைக்க முடிவு செய்திருப்பதாகவும் அதற்கு முஹிடின் யாசினின் ஆதரவு கிடைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அம்னோவுடன் ஒத்துழைக்க மகாதீர் மறுத்து வரும்போது, முஹிடின் அக்கட்சியிடம் மென்மையான போக்கைக் கொண்டிருக்கிறார்.

ஜொகூர் பெர்சத்துவின் தலைவர் மஸ்லான் பூஜாங் கூறும்போது, மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளில் 19 தொகுதிகள் நேற்று முன்தினம் கூடிப் பேசிய பின்னர், மகாதீரை கட்சித் தலைவராகவும் பிரதமராகவும் ஏற்றுக் கொள்ள முடிவெடுத்துள்ளதாகத் தெரி வித்தார். ஒரு சில தலைவர்கள் நாட்டின் பிரதமராக முஹிடின் பெயரை பரிந்துரைத்த பின்னர், மகாதீருக்கும் முஹிடினுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் 56 சட்டமன்ற உறுப்பினர்களில் 54 பேரிடம் பேட்டி கண்டு, பெர்சத்து, தேசிய முன்னணி மற்றும் பாஸ் ஆகியவை ஒன்றிணைந்து புதிய ஆட்சியை அமைக்க ஒப்புதல் கொடுத்துள்ளனர். இதனிடையே, 28 உறுப் பினர்களைக் கொண்டிருக்கும் பக்காத்தான், புதிய கூட்டணி ஆட்சியமைப்பதை எதிர்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × two =