ஜொகூர் பாரு ம.இ.கா தொகுதியின் தேசிய தினக் கொண்டாட்டம்

நாட்டின் 63 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி ஜொகூர் பாரு ம.இ.கா தொகுதி சிறப்பாக தேசிய தின கொண்டாட்டத்தை நடத்தியது.
ஜொகூர் பாரு ம.இ.கா தொகுதி தலைவர் ஜெயசீலன் தலைமையில் இந்த கொண்டாட்டம் நேற்று முன்தினம் நடைப்பெற்றது.
அதே வேளையில், ஜொகூர் பாரு ம.இ.கா தொகுதியின் 26ஆம் ஆண்டு பேராளர்கள் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டை ம.இ.கா தலைமைச் செயலாளர் டத்தோ அசோகன் தொடக்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் ஜொகூர் பாரு ம.இ.கா தொகுதி மகளிர் அணி தலைவி ஏற்பாட்டில் நினைவு சின்னங்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் ம.இ.கா கிளைத் தலைவர்கள், இளைஞர் மகளிர் அணியினர் ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + 19 =