ஜொகூர் சட்டமன்ற உறுப்பினர்கள் சொத்துகளை அறிவிக்க தீர்மானம் நிறைவேற்றம்

0

ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுடைய சொத்துகளை அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தை ஜொகூர் மந்திரி பெசார் டாக்டர் ஷாருடின் ஜமால் சட்டமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்தார்.பக்காத்தான் ஹராப்பான் செங்காராங் சட்டமன்ற உறுப்பினர் கைருடின் ரஹிம், பக்காத்தான் ஹராப்பான் பெமானிஸ் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சோங் பாட் புல், தேசிய முன்னணி பெலூட் சட்டமன்ற உறுப்பினர் அஸ்னி முகமட், தேசிய முன்னணி கஹாங் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.வித்தியானந்தன் ஆகிய நால்வர் இந்தத் தீர்மானம் மீது விவாதம் நடத்தினர்.
பக்காத்தான் ஹராப்பானின் 39 சட்டமன்ற உறுப்பினர்கள், தேசிய முன்னணியின் 16 சட்டமன்ற உறுப்பினர்கள், பாஸ் கட்சியின் 1 சட்டமன்ற உறுப்பினர் இந்தத் தீர்மானத்திற்கு இணக்கம் தெரிவித்தனர்.
சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொத்துகளை அறிவிக்க வேண்டும் என்ற சட்டம் எதுவும் நடப்பில் இல்லாததால் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக ஷாருடின் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 + ten =