ஜொகூர் சட்டமன்றம் கூடியது பிரதமர் அருகில் ஒஸ்மான் சாப்பியான்

பெரும் பரபரப்புக்கு மத்தியில் ஜொகூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய வேளையில், பிரதமரும் கம்பீர் சட்டமன்ற உறுப்பினருமான டான்ஸ்ரீ முஹிடின் யாசின் இதில் கலந்து கொண்டார்.
காலை 10.50 மணிக்கு கூட்டத் தொடரில் கலந்து கொள்ள முஹிடின் வந்தபோது ஜொகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஹஸ்னி முகமட் அவரை வரவேற்றார்.
நாட்டின் 8ஆவது பிரதமராகப் பதவியேற்ற பின்னர் ஜொகூர் சட்டமன்றக் கூட்டத்தில் முஹிடின் கலந்து கொள்வது இது இரண்டாவது முறையாகும்.
பெர்சத்து கட்சித் தலைவரான டான்ஸ்ரீ முஹிடீன் யாசின் அருகில் கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஒஸ்மான் சாப்பியான் அமர்ந்துள்ளார்.
பெர்சத்து கட்சியில் இருந்து எந்த நேரத்திலும் நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு தலைவராக ஒஸ்மான்
சாப்பியான் விளங்கிக் கொண்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + thirteen =