ஜொகூர் கால்பந்து வீரர் ஷப்பாவி கோவிட்-19 பாதுகாப்பு உதவிகளை வழங்கினார்

0

கோவிட்-19 பாதிப்பிலிருந்து மக்களும் நாடும் நிறைவாக மீண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் ஜொகூர் மாநிலத்தின் பிரபல கால்பந்து வீரர் முகமட் ஷப்பாவி ரஷிட் சுமார் ஆயிரம் போத்தல் கிருமி நாசினி திரவத்தை வழங்கினார். ஜொகூர்பாருவிலுள்ள கேபிஜே, தனியார் மருத்துவமனை,ரேலா படை, பொது பாதுகாப்புத் துறை ஆகிய தரப்பினருக்கு அவர் அந்த உதவியை வழங்கினார்.
இதனிடையே கோவிட்-19 பாதிப்பிலிருந்து நாடு மீண்டு வருவதற்கு தங்களது பங்களிப்பாக சுமார் 33 விழுக்காடு சம்பளத்தை பிடித்துக் கொள்ளும் படி அந்த பிரபலமான கால் பந்து வீரரும் அவரது குழுவினரும் கேட்டுக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து ஜொகூர் மாநில பேரிடர் வாரியத்திற்கு இந்த கால்பந்து அணி ஒரு கணிசமன தொகையை கொடுத்து தங்களின் ஆதரவை வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − twelve =