
ஜொகூரில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலில் 750,000 புதிய வாக்காளர்கள் பங்கு பெறவிருக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு 2.5 மில்லியன் வாக்காளர்கள் இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.
14ஆவது பொதுத்தேர்தலில் அங்கு 1.8 மில்லியன் வாக்காளர்கள் இருந்ததாக அம்னோவின் தலைமைச் செயலாளர் அமாட் மஸ்லான் தெரிவித்தார்.
வாக்காளர்களின் எண்ணிக்க அதிகரித்தபோதும், அம்னோவை அது எவ்வகையிலும் பாதிக்காது என்று அவர் தெரிவித்தார்.
சவால்களை அம்னோ எதிர்கொள்ளத்தான் வேண்டும். அதனைக் கண்டு எங்கும் ஓட முடியாது. ஒவ்வொரு மாதமும் 16ஆம் தேதி புதிய வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்
கடந்தாண்டு டிசம்பர் மாதம் 18 வயதானோருக்கு வாக்களிக்கும் சட்டத்தை ஜொகூர் மாநிலம் நிறைவேற்றிய பின்னர், அந்தச் சட்டம் ஜனவரி 16இல் அரசு இதழில் பதிவிடப்பட்டது. நாட்டில் புதிய வாக்காளர்கள் மொத்தம் 5.7 மில்லியன் வாக்காளர்கள் இருப்பதாகவும் அதில் 4.5 மில்லியன் பேர் 21 வயதுக்கும் மேலானவர்கள் என்றும் எஞ்சியோர் 18லிருந்து 21 வயதுக்குட்பட்டவர்களாவர்.