ஜொகூரில் இந்து ஆலயங்கள் திறப்பதற்கு பரிசீலனை செய்யப்படும்!

ஜொகூரில் இந்து ஆலயங் கள் திறப்பதற்கு மாநில அரசாங்கம் பரிசீலனை செய்யும் என ஜொகூர் மாநில அரசின் ஒற்றுமை, உள்நாட்டு வாணிபம் பயனீட்டாளர் விவகாரத்துறை குழுவிற்கான ஆட்சி மன்ற உறுப்பினர் டாக்டர் சோங் பாட் ஃபுல் நம்பிக்கை தெரிவித் துள்ளதாக மலேசிய இந்து சங்கம் ஜொகூர் மாநிலப் பேரவை யின் துணைத் தலைவர் தொண்டர் மணி கு. மாணிக்கம் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் செவ் வாய்க்கிழமை மாலை மலேசிய இந்து சங்கம் ஜொகூர் மாநிலப் பேரவையின் அழைப்பின் பேரில் டாக்டர் சோங் ஜொகூர் பாரு இராஜமாரியம்மன் ஆலயம் மற்றும் ஸ்கூடாய் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயங் களுக்கு நேரடியாக வருகை தந்து அங்கு முன்னெடுக்கப் பட்டுள்ள எஸ்ஓபி எனப்படும் சமூக இடைவெளி மற்றும் தர செயல்பாட்டு நடைமுறைகளை அறிந்து மனநிறைவு கொள்வ தாக குறிப்பிட்டதோடு ஜொகூர் மந்திரி பெசார் டத்தோ ஹஸ்னி முகமட்டின் கவனத்திற்கு இப்பிரச்சினையை கொண்டு சென்று வெகு விரைவில் ஆலயங்களை திறப்பதற்கான ஏற்பாட்டினை செய்வதற்கு உறுதியளித்ததோடு இந்த சிறப்பான ஏற்பாட்டினை செய்த மலேசிய இந்து சங்க ஜொகூர் மாநிலப் பேரவைக்கு நன்றி கூறியதாக மாணிக்கம் கூறினார்.
ஸ்கூடாய் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் அதன் தலைவர் டத்தோ கே.எஸ். பாலகிருஷ்ணன் மற்றும் ஜொகூர் பாரு இராஜமாரியம்மன் ஆலயத் தில் அதன் துணைத் தலைவர் வே. நாகலிங்கம் டாக்டர் சோங்கை எதிர்கொண்டு வரவேற்ற இந்நிகழ்வில் ஆலயப் பொறுப்பாளர்களும் மலேசிய இந்து சங்கம் ஜொகூர் மாநிலப் பேரவைச் செயலாளர் தொண் டர்மணி க. விஜயன், ஸ்கூடாய் வட்டாரப் பேரவைத் தலைவர் தொண்டர்மணி க. சேகரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × two =