ஜொகூரின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது

கடந்த 10 ஆண்டுகளை விட தற்போது ஜொகூரின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளதாக மாநில மந்திரி பெசார் டத்தோ ஹஸ்னி முகமட் கூறினார்.
கோவிட்-19 தாக்கத்தைத் தொடர்ந்து மாநில பொருளாதார வளர்ச்சி மேலும் மோசமடைந்து உள்ளதாக நேற்று ஜொகூர் சட்டமன்றக் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
ஜொகூரில் விவசாயத் துறையைத் தவிர இதர அனைத்துத் துறைகளிலும் பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் எதுவும் இல்லை என அவர் சொன்னார்.
இவ்வாண்டிற்கான இரண்டாம் காலாண்டில், ஜொகூரின் உள்நாட்டு மொத்த உற்பத்தி மேலும் வீழ்ச்சி காணும் என அவர் சொன்னார்.
மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்து தெங்காரோ சட்டமன்ற உறுப்பினர் ரவின்குமார் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
கோவிட்-19 தாக்கத்தைத் தொடர்ந்து மாநிலத்தில் 173,000 பேர் வேலையிழந்துள்ளனர்.
அதே வேளையில், சிங்கப்பூரில் 45,000 முதல் 200,000 தொழிலாளர்கள் வேலை இழப்பர் என சிங்கப்பூர் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளதாக ஹஸ்னி தெரிவித்தார்.
சிங்கப்பூரில் வர்த்தக நடவடிக்கைகள் குறைக்கப் பட்டால், ஜொகூரில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மலேசியர்கள் வேலையிழக்க நேரிடும் என அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + four =