ஜெர்மன் ஓபன் பேட்மிண்டனில் சிந்து, செய்னா தோல்வி

ஜெர்மன் ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சிந்து, செய்னா அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்.
ஜெர்மனியில், ‘சூப்பர் 300’ ஓபன் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சிந்து, சீனாவின் மன் யி ஜாங் மோதினர். முதல் செட்டை 14-21 என இழந்த சிந்து, பின் எழுச்சி கண்டு இரண்டாவது செட்டை 21-15 எனக் கைப்பற்றி பதிலடி தந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் ஏமாற்றிய இவர், 14-21 என இழந்தார். மொத்தம் 55 நிமிடம் நீடித்த போட்டியில் சிந்து 14-21, 21-15, 14-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் செய்னா நேவல் 10-21, 15-21 என, தாய்லாந்தின் ரட்சனோக் இன்டானனிடம் தோல்வியடைந்து ஏமாற்றினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சீனாவின் லு குவாங் சூ மோதினர். ஒரு மணி நேரம், 7 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய ஸ்ரீகாந்த் 21-16, 21-23, 21-18 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty + 14 =