ஜெராம் இந்தியர்களுக்கு தீபாவளிப் பற்றுச் சீட்டுகள்

இங்கு, தாமான் பெர்மாய் சிம்பாங் தீகா ஜெராம் பாலாய் ராயா மண்டபத்தில் நேற்று நடைபெற்ற தீபாவளி ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள் வழங்கும் நிகழ்ச்சியில் வட்டார இந்திய குடியிருப்பாளர்கள் சிலருக்கு ஜெராம் சட்டமன்ற உறுப்பினர் ஸாஹிட் ரோஸ்லி அதற்கான பற்றுச் சீட்டுகளை எடுத்து வழங்கி, தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
கோலசிலாங்கூர் நகராண்மைக்கழக உறுப்பினர் புஷ்பா ராஜன் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
ஜெராம் முக்கிம் பெங்குலு முகமட் ரிஷான் ஹாரோன், ஜெராம் கிராமத் தலைவர் தோக் புவான் ஜோஹாரியா யூசோப் கிராம நிர்வாகக் குழுத் தலைவர் துவான் ஹைருடின் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine − 5 =