ஜெரம் பாடாங் தொகுதியை பக்காத்தான் கைப்பற்றும்

எதிர்வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் நெகிரி செம்பிலான் ஜெரம் பாடாங் சட்டமன்றத்தை பக்காத்தான் ஹராப்பான் கைப்பற்றுமென அண்மை யில் கம்போங் தாமான் ஜெயா கிராம மேம்பாட்டுக்குழு ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் சிறப்புரையாற்றிய நீலாய் சட்டமன்ற மற்றும் நெகிரி மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அருள்குமார் வருகை யாளரை கேட்டுக் கொண்டார். இத்தொகுதியில் யார் வேட்பாளர் என்பது முக்கியமல்ல. பக்காத்தான் ஹராப்பான் சார்பாக யார் போட்டி யிட்டாலும் வெற்றிபெற செய்ய அனை வரும் பாடுபட வேணடுமென வருகை யாளரை கேட்டுக் கொண்டார். இந்த கிராமம் கு. முத்து தலைமையில் சிறப் பாக செயல்படுவதாக பலர் இங்கே கூறுவது மன மகிழ்சியாக இருப்பதாக தெரிவித்தார். இவ்வேளையில் கு. முத்து மற்றும் செயற்குழுவினருக்கு வாழ்த்தும் நன்றி யும் கூறினார். நிகழ்வில் ஏற்பாட்டுக்குழு தலைவர் மற்றும் தாமான் ஜெயா கிராமத் தலைவர் கு. முத்து வரவேற்புரை யாற்றினார். தொடர்ந்து சிறப்புரையாற்றி னார் ஜெரம் பாடாங் சட்டமன்ற பக்காத்தான் ஹராப்பான் ஒருங்கிணைப் பாளர் ஹஜி முஸ்லியாடி. அவர் தமதுரை யில் இக்கிராமத்துககு தன்னால் முடிந்த உதவிகளை செய்வதாக உறுதி கூறினார். தொடர்ந்து இந்நிகழ்வுக்கு வெள்ளி 2,000 மானியம் வழங்குவதாக வாக்குறுதியளிததார். தொடர்ந்து வருகையாளர்கள் அனைவருக்கும் தீபாவள வாழ்த்து தெரிவித்துக் கொண் டார். பலவிதமான உணவு வகைகள் இந்நிகழ்வில் பரிமாற்றப்பட்டது. இந்நிகழ்வை மேலும் சிறப்புச் சேர்க்க சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் ப. குணா செர்த்திங் சட்டமன்ற பக்காத் தான் ஹராப்பான் ஒருங்கிணைப்பாளர் அப்துல் ராமான், சிரம்பான் மாநகரை மன்ற உறுப்பனர் ஜமிலா, ஜெம்போல் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் கே. அசோக்குமார், எம். ரமேஷ், பெ. சுப்ரா, ஜெலூபு மாவட்டமன்ற உறுப்பினர் ஆர். பெருமாள், இராமத். தலைவர்கள் கு. ராஜகுமார், கே. முருகன், ரகு, கிளைத தலைவர்கள் ப. குமார், கருப்பையா தாமான் ஜெயா கிராம மேம்பாட்டுக்குழு செயறகுழுவினர்கள் மற்றும் 100 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − 6 =