ஜி.பி.எஸ். கூட்டணிக்கு அமைச்சரவை பதவிகள் முக்கியமல்ல

காபோகான் பார்டி சராவாக் (ஜி.பி.எஸ்.) தனது ஆதரவை முஹிடினுக்கு வழங்கிய போது கூட்டரசு அமைச்சரவையில் ஜி.பி.எஸுக்கு இடம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் மேற்கொள் ளப்பட்டது அல்ல என்று முதலமைச்சர் அபாங் ஜொகாரி ஒப்பெங் நேற்று தெளிவுபடுத்தி னார். அமைச்சரவையில் மந்திரி பதவிக்காக வற்புறுத்தல் மேலும் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளுதல் போன்றவை களுக்காக அந்த ஆதவை முஹிடி னுக்கு வழங்கும் போது முக்கியத்துவம் அளிக்க வில்லை என்று அவர் நிருபர் களிடம் கூறினார்.

அதற்கு முன் கூச்சிங்கில் மதங்களுக் கிடையே நல்லிணக்கம் என்ற கருத்தரங்கில் பங்கேற்றார். அச்சமயத்தில் நாட்டை சூழ்ந் திருந்த அரசியல் நெருக்கடிக்கு ஓர் தீர்வு காண்பதே ஜி.பி. எஸ்ஸின் முக்கிய நோக்கமாக இருந்தது. ஜி.பி.எஸ். முஹிடினுக்கு ஆதரவை மட்டுமே தெரிவித் திருந்தது. புதிதாக உருவாக்கப் பட்ட பெரிக்காத்தான் நேசனலில் ஜி.பி.எஸ். அங்கத்தவம் பெற வில்லை என்று அபாங் விளக்கி னார். முஹிடினுக்கு வழங்கப் பட்ட ஆதரவுக்காக ஜி.பி.எஸ்.

கூட்டணிக்கு எந்த அமைச் சரவை பதவிகள் தரப்பட்டன என்று வினவிய போது ஜி.பி.எஸ். தலைவரான அபாங் ஜொகாரி இவ்வாறு கூறினார். இதற்கிடையே நேற்று வெளி யிட்ட அறிக்கையில் முதலமைச்சர் அலுவலகம், சரவாக்கில் உள்ள ஜி.பி.எஸ். என்ற கூட்ட ஒர் அரசியல் அமைப்பாகும் என்று கூறியது. நாட்டின் அரசியல் நிலைத் தன்மையை உறுதிபடுத்துவ தற்காக ஜி.பி.எஸ். முஹிடி னுக்கு தனது ஆதரவை வழங் கியது என்றும் அவ்வறிக்கை மேலும் கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × four =