ஜிபிஎஸ் கூட்டணிக்கு அதிகார ஆசை இல்லை

புதிய தேர்தலை நடத்த ஜிபிஎஸ் கூட்டணிக்கு அதிகார ஆசை இல்லை என சரவாக் முதலமைச்சர் அபாங் ஜொஹாரி ஓபெங் கூறினார்.
தற்போது கோவிட்-19 தாக்கம் அதிகரித்து வருவதால், இப்போதைக்கு மாநில சட்டமன்றத் தேர்தலை நடத்துவது ஏற்புடையதல்ல என்றார் அவர்.
இருப்பினும் சுகாதார சூழ்நிலை, சட்டமன்ற தவணைக் காலம் முடிவடையும் நிலை ஆகிய 2 முக்கிய விவகாரங்களை மாநில அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மக்களின் நலனைப் பாதுகாப்பதோடு பொருளாதார மீட்சிக்கு உதவுவதில்தான், மாநில அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருவதாக அவர் சொன்னார்.
ஆனால் அடுத்த ஜூன் மாதத்திற்குள் மாநில சட்டமன்றத் தேர்தலை நடத்தியாக வேண்டும் என்றார் அவர்.
அதே வேளையில், மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பாக சுகாதார அமைச்சு, மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளை மாநில அரசாங்கம் பெறும் என அவர் குறிப்பிட்டார்.
மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறுமானால், தேர்தல் ஆணையம் நிர்ணயிக்கப்பட்ட பணி நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten + twelve =