ஜிஎல்சி தலைவர்களாக அரசியல்வாதிகளா?

பொதுத்துறை நிறுவனங்களில்(ஜிஎல்சி) அரசியல்வாதிகள் தலைவர்களாக நியமிக்கப்படுவது நேர்மையற்ற செயல் என்று முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்பதவிகளில் அரசியல்வாதிகள் நியமிக்கப்பட்டால், அவர்களின் அனுபவம் அந்த அமைப்புகளை உயர்த்துவதோடு, வருமானத்தையும் பெருக்க முடியும் என்று நிதியமைச்சர் தெங்கு ஸஃப்ருல் அப்துல் அஸிஸ் குறிப்பிட்டதை அபத்தம் என்று குறிப்பிட்ட லிம் குவான் எங், அம்மாதிரியான அமைப்புகளை நிர்வகிப்பதில் திறமையானவர்கள், தொழில்துறைச் சார்ந்த நிபுணர்களே என்றும் சுட்டிக்காட்டினார்.
ஜிஎல்சிகள் குறிப்பிட்ட அமைச்சர்களின் கீழ் வருவதால், அவற்றைச் சோதனை செய்து சரிபார்க்க முடியும் என்பதால் அது இயல்பாக நடைபெறும் சாத்தியம் உள்ளது. அரசின் நிறுவனங்களில்(ஜிஎல்சி) அரசியல்வாதிகளைத் தலைவர்களாக நியமிக்கப்படுவதால், தவறேதும் நிகழ்ந்தால், நடவடிக்கை எடுப்பது இயலாத காரியமாகும் என்று குவான் எங் தெரிவித்தார்.
பக்காத்தான் ஹராப்பான் காலத்தில், அரசின் கீழுள்ள அதிகாரமுடைய அமைப்புகளுக்கு மட்டுமே அரசியல்வாதிகள் நியமிக்கப்பட்டனர். அந்த அமைப்புகள் வியாபார ரீதியில் இயங்காமலும் அரசியல் தலையீடு இல்லாமலும் அரசியல்வாதிகள் அதில் நியமிக்கப்பட்டனர்.
அரசின் நோக்கத்தை நிறைவேற்ற அரசியல்வாதிகளுக்கே முடியும் என்று சொல்வது நியாயமான கூற்றாக இல்லை என்றும் லிம் குவான் எங் குறிப்பிட்டார்.
ஆட்சி கவிழாமல் இருப்பதை உறுதி செய்ய அம்மாதிரியான பதவிகளை அரசியல் பரிசுகளாக வழங்குவதோடு, அந்த அரசியல்வாதிகளின் ஊழல் விசாரணையிலிருந்து தடுக்கும் செயலென்றும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 + 10 =