ஜாஸ்மின் விரைவுப் பேருந்து பயணிகள் கோவிட்-19 பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்

0

கூலிம் சுகாதார இலாகா கடந்த மார்ச் 16 ஆம் தேதி சிரம்பானிலிருந்து சுங்கை பட்டாணி வந்தடைந்த ஜாஸ்மின் விரைவு பேருந்து பயணிகளில் ஒருவருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்றியிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
இச்செய்தி முகநூலில் வைரலாகி வருகிறது. இதன் பின்னணியில் கூலிம் சுகாதார இலாகா ஜாஸ்மின் விரைவு பேருந்து எண் பட்டை ஞடுணு9689 தெர்மினல் 1 சிரம்பான் இரவு 8.30 மணிக்கு மார்ச் 16 ஆம் தேதி புறப்பட்ட ஜாஸ்மின் பேருந்தில் பயணித்தவர்கள் கூலிம் சுகாதார இலாகாவை 04- 49499121 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பரிசோதனை செய்து கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
இப்பேருந்து ஷா ஆலம், ஈப்போ, கமுந்திங், பாகான் செராய்,பாரிட் புந்தார், நிபோங் தெபால், கூலிம் மற்றும் பட்டர்வொர்த் ஆகிய இடங்களில் பயணிகளை ஏற்றியதாக நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 7 =