வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் பகாங்கில் உள்ள அனைத்து வர்த்தக கட்டடங்களிலுள்ள அறிவிப்பு பலகைகளில் ஜாவி எழுத்துகள் இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பு பலகைகளிலும் விளம்பரங்களிலும் ஜாவி எழுத்துகள் வைப்பதற்கான காலக்கெடுவை மாநில அரசாங்கம் நீட்டிக்காது என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சி மன்ற ஆட்சிக்குழு உறுப்பினர் அப்துல் ரஹிம் மூடா கூறினார்.
ஜாவி எழுத்துகளை அறிவிப்பு பலகைகளில் எழுதுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட வேண்டும் என்று தெருந்தும் சட்டமன்ற உறுப்பினர் சிம் சோன் சியாங் கேட்டுக் கொண்டதற்கு பதிலளிக்கையில் அப்துல் ரஹிம் மேற்கண்டவாறு கூறினார்.
ஜாவி எழுதி வைக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.