ஜாசின், அலோர் காஜா மாவட்டங்களில் கனத்த மழியால் வெள்ளம்

ஜாசின் மற்றும் அலோர் காஜா மாவட்டங்களின் சில பகுதிகளில் நேற்று மாலை 5 மணி தொடங்கி பெய்த கனத்த மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 3 தற்காலிக வெள்ள நிவாரன மையங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன.
அவற்றில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 41 குடும்பங்கங்களைச் சேர்ந்த 147 பேர் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.
ஜாசினில் தெடோங் தேசிய ஆரம்பப்பள்ளி மற்றும் டங் அனும் இடைநிலைப்பள்ளி; அலோர் காஜாவில் டுரியான் துங்கால் தேசிய ஆரம்பப்பள்ளி ஆகியவையே அம்மூன்று தற்காலிக மையங்கள் என்று மலாக்கா மாநில மலேசிய பொது தற்காப்புப் படையின் இயக்குநர் லெஃப்டனன் கலனல் எஃபெண்டி அலி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 − one =