ஜாக்கிங் செய்யும்போது கண்டிப்பாக இதையெல்லாம் செய்யாதீங்க…

ஜாக்கிங்பயிற்சி மேற்கொள்ளுவதில் தொடக்க நிலையில் இருப்பவர்கள் சில தவறுகளை செய்வதற்கு வாய்ப்புகளுண்டு. அந்த வகையில் ஜாக்கிங்பயிற்சி மேற்கொள்பவர்கள் தவிர்க்க வேண்டிய தவறுகளை பற்றி பார்ப்போம்.

ஜாக்கிங்பயிற்சியின் மூலம் உடல் எடை குறைப்பது தான் உங்கள் நோக்கம் என்றால், நீங்கள் ஜாக்கிங்பயிற்சி மேற்கொண்டும் உடல் எடை குறையவில்லை எனில் நீங்கள் ஓடும் போது தவறு செய்கிறீர்கள் என்று பொருள். இந்த மாதிரி தவறுகள் சாதாரணம் தான். அதுவும் ஜாக்கிங்பயிற்சி மேற்கொள்ளுவதில் தொடக்க நிலையில் இருப்பவர்கள் தவறுகள் செய்வதற்கு அதிக வாய்ப்புகளுண்டு.
நீங்கள் இப்போது தான் ஜாக்கிங்பயிற்சியை தொடங்கி இருக்கிறீர்கள் என்றால் வீட்டிலுள்ள பழைய காலணிகளை தான் உபயோகிக்க ஆரம்பித்திருப்பீர்கள். பெரும்பான்மையான சமயங்களில் அது உங்கள் பாதங்களுக்கு தர வேண்டிய சவுகரியத்தை தராது. மாறாக அசவுகரியத்தையே ஏற்படுத்தும். எனவே ஜாக்கிங்பயிற்சிக்கு உகந்த, பொருத்தமான காலணிகளை அணிந்து கொண்டு ஓடுவது அவசியம். அப்போது தான் கால்கள் மற்றும் பாதங்களில் காயங்கள் ஏற்படாது.
ஜாக்கிங்பயிற்சி மேற்கொள்ளுவதில் தொடக்க நிலையில் இருப்பவர்கள் உற்சாக மிகுதியால் மற்றும் வேகமாக ஓடினால் நல்லது என்று நினைத்து கொண்டு வேகமாக ஓடுவார்கள். ஆனால் அப்படி செய்ய கூடாது. இப்படி ஓடுவதால் முழங்காலுக்கு கீழும் கணுக்காலுக்கு மேலும் உள்ள காலின் முன்பகுதியில் வலி ஏற்படும். இதனை shin splints என்று கூறுவர். அல்லது தொடை எழும்பின் கீழ்பகுதியும் முழங்காலும் சந்திக்கும் இடத்தில் முன்புறம் அல்லது பின்புறம் வலி ஏற்படும். இதனை runner’s knee என்று கூறுவர். அல்லது முழங்காலின் பக்கவாட்டில் வலி ஏற்படும். இதனை ITB syndrome என்று கூறுவர். இவ்வாறு இவற்றில் ஏதோ ஒரு வலி ஏற்பட வாய்ப்புண்டு. எனவே மெதுவாக தான் உங்கள் வேகத்தையும் , தூரத்தையும் அதிகரிக்க வேண்டும் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 + six =