ஜனவரி 23ஆம் தேதி முதல் வுஹானில் இருந்து சுற்றுப் பயணிகள் வரவில்லை

0

கடந்த ஜனவரி 23ஆம் தேதி முதல் சீனாவின் வுஹானில் இருந்து சுற்றுப்பயணிகள் யாரும் மலேசியாவிற்கு வரவில்லை என சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸுல்கிப்ளி அமாட் கூறினார்.

ஜனவரி 23ஆம் தேதிக்கு முன்னர் மலேசியாவிற்கு சீனாவில் இருந்து வந்தடைந்துள்ள சுற்றுப் பயணிகள் குறித்து குடிநுழைவு இலாகாவிடம் சுகாதார அமைச்சு தகவல்களைச் சேகரித்து வருவதாக அவர் சொன்னார். நேற்று இங்கு கேஎல்ஐஏ2 அனைத்துலக விமான நிலைத்திற்கு வருகை புரிந்து நிலைமையைக் கண்டறிந்த பின் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். மலேசியாவில் இதுவரை 4 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டுள்ளதாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இன்னும் சிலருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதா என்பது குறித்து ஆய்வுகூட விசாரணை அறிக்கைக்காக தமது அமைச்சு காத்திருப்பதாக அவர் சொன்னார். இவர்கள் அனைவரும் சீன நாட்டுப் பிரஜைகள். கொரோனா வைரஸ் நிலவரம் குறித்து சுகாதார அமைச்சு அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக அவர் தெரிவித்தார்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 4 =