ஜனவரி 16ஆம் தேதி விசாரணை

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பிருப்பதாக சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள காடேக் சட்டமன்ற உறுப்பினர் ஜி.சாமிநாதன், ஜசெக உறுப்பினர் வி.சுரேஷ்குமார் ஆகியோரின் ஜாமீன் விண்ணப்பம் வரும் ஜனவரி 16ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
தமது கட்சிக்காரர்கள் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி ஜாமீன் மனுவுக்கான விண்ணப்பங்களைச் செய்துள்ளதாக வழக்கறிஞர் ராம் கர்ப்பால் சிங் நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து, நீதிபதிகள் அமாட் ஷாஹிர் முகமட் சாலே மற்றும் கோலின் லோரண்ஸ் செக்குரா இந்தத் தேதியை நிர்ணயித்தனர்.
இந்த விண்ணப் பங்களுக்கான எதிர் வாக்கு மூலத்தை வரும் ஜனவரி 9 மற்றும் 13ஆம் தேதிகளில் செய்யப்போவதாக அரசு தரப்பு துணை வழக்கறிஞர்களான முகமட் இஸானுடின் அலியாஸ் மற்றும் ரொஹைஸா அப்துல் ரஹ்மான் நீதிமன்றத்தில் கூறினர்.
இவர்களுக்கெதிரான குற்றச்சாட்டு உறுதிப் படுத்தப்பட்டால் பீனல் சட்டத்தின் 130து(1) இன் கீழ் ஆயுள்தண்டனை அல்லது கூடுதல்பட்சம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven − 4 =