ஜசெக மலாய்க்காரர்களை அச்சுறுத்துகிறதா? இது ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு

இந்நாட்டில் ஜசெக மலாய்க் காரர்களை அச்சுறுத்துகிறது என்று கூறப்பட்டது எல்லாம் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு என்று லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் துன் டாக்டர் மகாதீர் நேற்று சாடினார்.
பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் ஜசெக இடம் பெற்றிருந்தது. அப்போது இந்த கட்சி மலாய்காரர்களை அழித்து
விடும் என்று பல குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார்கள். இந்த குற்றச்
சாட்டுகள் அனைத்தும் எதிர்க் கட்சிகளால் ஜோடிக்கப்பட்டவை என்று டாக்டர் மகாதீர் முகமட்
கூறியுள்ளார்.இந்த குற்றச்சாட்டு களுக்கு எந்த அடிப்படையும் இல்லை. மலாய்க்காரர்களை பயமுறுத்தி அவர்கள் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தை நிராகரிக்க செய்வதே இதன் நோக்கமாகும். உண்மையில், ஜசெக மலாய்க்காரர்களை அழிக்க
முடியாது என்றார் அவர். பக்காத்
தான் ஹராப்பான் அரசாங்கத் தில் ஜசெக கட்சி ஆதிக்கம் செலுத்து கிறது என்றும் மகாதீர் அதில் பொம்மையாக இருப்பதாகவும் இதனால் மலாய்க்காரர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள் என்றும் எதிர்க் கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. இந்த குற்றச்சாட்டுகளை பலமுறை நான் மறுத்துள்ளேன். பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் பாதுகாப்பு விவகாரங் களுக்கு பொறுப்பான அமைச்சர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் இருந்தார் என்று டாக்டர் மகாதீர் கூறினார்.
உள்துறை அமைச்சராக இருந்த போது, ஜசெகவின் அச்சுறுத்தலை டான்ஸ்ரீ முஹிடின் அறிந்திருப்பார் என்றார் அவர்.
அந்த நேரத்தில் எதிர்க் கட்சிகளால் ஜோடிக்கப்பட்ட பொய்கள் டான்ஸ்ரீ முஹிடின் உட்பட கட்சியின் சில தலை வர்களையும் கவர்ந்தது. அதனால் பக்காத்தானை விட்டு அவர்கள் வெளியேறத் தூண்டியது என்று துன் மகாதீர் கூறினார். இதனால், நானும் பாக்காத்தான் அரசாங்கத்தின் பிரதமர் பதவியில் இருந்து விலகினேன். … எனது விலகல் தவிர்க்க முடியாதது என்று அவர் கூறினார்.
அரசாங்கத்துடன் தொடர் புடைய நிறுவனங்களை (ஜி.எல்.சி) வழிநடத்த தொழில்முறை நபர்களை நீக்கிவிட்டு அரசியல்வாதிகளை நியமிப்பதில் பெரிக்காத்தான் நேஷனல் எடுத்துள்ள நடவடிக் கையை துன் மகாதீர் விமர்சித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − 2 =