ஜசெக பொதுச் செயலாளராக நியமனம் பெற அந்தோணி லோக்கிற்கு வாய்ப்பு பிரகாசம்

லிம் குவான் எங்கிற்கு பதிலாக அடுத்த ஜசெக பொதுச் செயலாளராக நியமனம் பெற கட்சியின் அமைப்புச் செயலாளர் அந்தோணி லோக்கிற்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என கட்சியின் தலைவர் ஒருவர் கூறினார்.
கட்சியின் பொதுச் செயலாளரான லிம்மின் மூன்றாம் தவணைப் பதவிக் காலம் முடிவடையவிருப்பதாக அவர் கூறினார்.
கோவிட்-19 தாக்கத்தால் கட்சியின் மத்திய செயலவைக் குழுவிற்கான தேர்தல் அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளது.
ஆகக் கடைசியாக கடந்த 2017 நவம்பர் 12ஆம் தேதி கட்சியின் மத்திய செயலவைக் கான தேர்தல் நடைபெற்றது.
கட்சி விதிமுறையின்படி, ஒருவர் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை 3 தவணைகளுக்கு வகிக்கலாம். ஒரு தவணை 3 ஆண்டுகளாகும்.
ஆகையால் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக அந்தோணி லோக்கை கட்சி தேர்வு செய்யும் என தாம் நம்புவதாக அந்தத் தலைவர் தெரிவித்தார்.
அந்தோணி லோக் கட்சியின் அமைப்புச் செயலாளராக நீண்ட காலம் இருந்து வருவதோடு லிம்மிற்கு மிகவும் அணுக்க மானவர் என அவர் சொன்னார்.
கட்சியின் அமைப்புச் செயலாளர்தான், கட்சியின் பெரும்பாலான நடவடிக்கைகளைக் கண்காணித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜசெக உறுப்பினர்களும் தலைவர்களும் அந்தோணி லோக்குடன் எவ்வித பிரச்சினையும் இல்லை என அவர் சொன்னார்.
தற்போது கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்களாக ஙா கோர் மிங், திரேசா கொக், வி.சிவகுவார் ஆகியோர் இருந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 − one =