ஜசெக தலைவராக லிம் குவான் எங்?

ஜசெகவின் தலைவராக டான் கோக் வைக்குப் பதிலாக முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் நியமனம் செய்யப் படுவார் என எதிர்பார்க்கப்படு கிறது. லிம் குவான் எங் வகித்து வரும் ஜசெக பொதுச் செயலாளர் பதவிக்கான தவணைக்காலம் இவ்வாண்டு இறுதியில் முடி வடைவதால் தலைவர் பதவிக்கு அவர் நியமனம் செய்யப்படுவார் என நம்பப்படுகிறது.
செராஸ் நாடாளுமன்ற உறுப்பினரான டான் கோக் வை லிம்மிற்கு வழிவிட கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளக் கூடும் என சின் சியூ ஜிட் போ தினசரி கூறியது. இதனைத் தொடர்ந்து லிம் கிட் சியாங் போல் கட்சியின் ஆலோசகராக டான் கோக் வை நியமனம் செய்யப்படலாம் என அந்த செய்தி குறிப்பிட்டது.
இவ்வாண்டு இறுதியில் நடைபெறும் கட்சியின் வருடாந் திரக் கூட்டத்தில் நடைபெறும் கட்சித் தேர்தலில் இந்த மாற்றம் நடைபெறலாம் என நம்பப்படு கிறது. அதே வேளையில், கட்சியின் புதிய தலைமைச் செயலாளராக முன்னாள் போக்குவரத்து அமைச்சரும் கட்சியின் அமைப்புச் செயலாளருமான அந்தோணி லோக் நியமனம் செய்யப்படலாம் என அந்த தினசரி குறிப்பிட்டது.
டாமன் சாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா, தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஙா கோர் மிங் மற்றும் செனட்டர் லியூ சின் தோங் ஆகியோரின் பெயர்களும் பொதுச் செயலாளர் பதவிக்கு அடிபடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen + fifteen =