ஜசெகவின் ஆசை வார்த்தைகளுக்கு அடிமையாகக் கூடாது

மலாய் இளைஞர்கள் ஜசெகவின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி அதில் சேர்ந்து அடிமைகளாக ஆகக் கூடாது என்று அம்னோவின் மூத்த தலைவர் தெங்கு ரஸாலி ஹம்சா அறிவுறுத்தியுள்ளார்.
ஜசெகவை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியுமானால், மலாய் இளைஞர்கள் அதில் சேர முன்வருவதில் பாதகமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அக்கட்சியில் நுழைந்து அதனை தங்களின் முழு கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதானால், அதில் சேரலாம். ஆனால், நாட்டின் நிர்வாகத்தை ஆக்கிரமித்துக் கொள்ள மலாய் இளைஞர்கள் ஜசெகவுக்குத் துணை போகக் கூடாது என்றும் அதற்கு அடிமைகளாகச் செயல்படக் கூடாதென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஜசெக மக்களைக் கவர பல்வேறு தந்திரங்களைப் பயன்படுத்தியதாகவும் அதில் ஒன்றுதான் ‘மலேசியன் மலேசியா’ எனும் சுலோகமாகும். அதனை அக்கட்சி இன்னமும் வலுவாகப் பின்பற்றி வருவதாக கூ லீ என்ற தெங்கு ரஸாலி குறிப்பிட்டார்.
பக்காத்தான் ஆட்சியில் ஜசெகபங்கு பெற்றிருந்தபோது, துன் மகாதீரின் ஆட்சியை நடத்தியதே ஜசெகதான் என்று அம்னோவும் பாஸ் கட்சியும் குற்றம் சாட்டியிருந்தன.
பக்காத்தான் ஆட்சியில், ஜசெகவின் ஆதிக்கத்தினால் மலாய்க்காரர்களின் உரிமைகளும் சலுகைகளும் கரைந்து போனதாக அக்கட்சிகள் குறிப்பிட்டிருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen − one =