சோழர் காலத்து அந்தமான் தமிழர்களின் சோகமான வரலாற்றுச் சுவடுகள்!

முன்பு காலத்தில் அந்தமான் நிகோபர் தீவுகள் முழுவதும் பற்பல பிரிவுகளைச் சேர்ந்த பழங்குடி மக்கள் வாழ்ந்தார்கள். அந்தப் பழங்குடி மக்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கட்டுமரங்களின் மூலமாகக் கடல் கடந்து வந்து அங்கே குடியேறி விட்டார்கள். பெரும்பாலும் தென்கிழக்கு ஆசியா பகுதிகளில் இருந்து வந்தவர்கள். ஆஸ்திரேலியா; பாபுவா நியூகினி; போர்னியோ போன்ற இடங்களில் இருந்து வந்து இருக்கலாம். மலாயாவில் இருந்து புலம்பெயர்ந்த பழங்குடி மக்களையும் அந்தக் கணக்கில் சேர்க்க வேண்டும். ஆனால் உலகின் ஒரு சில நாடுகளில் மண்ணின் மைந்தர்களை, அந்தக் கணக்கில் சேர்க்க இயலாது. மண்ணின் மைந்தர்கள் என்பது வேறு. அசல் மண்ணின் மைந்தர்கள் எனும் பழங்குடி மக்கள் வேறு. அசல் மண்ணின் மைந்தர்களின் பெயரைச் சொல்லி பேர் போடுபவர்களை மனிதவியலாளர்கள் அந்தக் கணக்கில் சேர்க்க மாட்டார்கள். இராஜேந்திர சோழன் தென்கிழக்காசியாவின் மீது படையெடுக்கும் போது அந்தமான் தீவுகளில் ஏறக்குறைய 200 தமிழர்களைத் தங்க வைத்துவிட்டு இந்தோனேசியாவுக்குப் போய் இருக்கிறார். படையெடுப்பிற்குப் பின்னர் அவர் திரும்பிச் செல்லும் போது என்ன அவசரமோ; என்ன நெருக்கடியோ தெரியவில்லை. அந்தமான் தீவுகளில் விட்டுச் சென்ற தமிழர்களை மறந்த வாக்கில் சென்று விட்டார்.ஏன் என்று கேட்க வேண்டாம். அந்த மகா சோழரைக் கேட்க வேண்டிய கேள்வி. ஆயிரத்தெட்டு அவசரங்களில் இதுவும் ஓர் அவசரமாக இருந்து இருக்கலாம். அதிலும் ஒரு நல்லது நடந்து இருக்கிறது.
அந்தமான் தீவுகளில் அப்படித் தனிமைப் படுத்தப்பட்ட தமிழர்களும் தனியாக வாழ்ந்து தனி ஒரு சமூகத்தையும் உருவாக்கி விட்டார்கள். அந்தத் தீவுகளில் ஏற்கனவே வாழ்ந்து வந்த ஷோம்பேன் பழங்குடி மக்களுடன் இணைந்து ஒரு புதிய கலப்பு தமிழர்ச் சமுதாயத்தையே உருவாக்கி விட்டார்கள்.இன்றும் அந்தத் தமிழர்க் கலப்பு இன மக்கள் ஷோமேன் எனும் பழங்குடி இனத்தின் பார்வையில் வாழ்ந்து வருகிறார்கள். முகத்தைப் பார்த்தாலே தமிழர்களின் முகத் தோற்றங்கள் பளிச்சென தெரியும். வேறு விளக்கம் வேறு சான்றுகள் தேவையே இல்லை. இவர்களுக்கு முன்னதாகவே மற்றும் பல பழங்குடி இன மக்கள் அந்தமான் தீவுகளில் குடியேறி விட்டார்கள். ஷோம்பேன் தமிழர்கள் என்பவர்கள் அந்தப் பழங்குடி இன மக்களுக்குப் பின்னர் கால் பதித்தவர்கள். ஏறக்குறைய 1000 ஆண்டுகள் ஆகின்றன.
அந்த வகையில் அந்தமான் தீவுகளில் பல இனங்கள். பல சமூகங்கள். பல தோற்றங்கள். பல நிறங்கள். பல உடல் அமைப்புகள். அவர்களில் சில பழங்குடி இனங்கள் மட்டுமே தற்சமயம் எஞ்சி இருப்பதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
ஜரவா எனும் பழங்குடி மக்கள் அந்த மானில் உண்மை யிலேயே செல்லப் பிள்ளை களாகக் கருதப் படுகிறார்கள். ஜரவா (துயசயறய) எனும் சொல்லுக்கும் ஜரவாக் (துயசயறயம) எனும் சொல்லுக்கும் ஒரே ஓர் எழுத்து வேறுபாடு. அதையும் கவனியுங்கள்.சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை ஜரவாக்கள் தெற்கு அந்தமான் தீவை ஆதிக்கம் செலுத்தியவர்கள். அப்படிப்பட்ட ஓர் ஆதிக்கம் இருந்தாலும் இடம் பெயர வேண்டிய ஒரு சூழ்நிலை.
ஆங்கிலேயர்களின் வருகை; அந்தமான் தீவுகளின் நகரமயமாக்கல்; வெளிநாட்டவரின் நாகரிகத் திணிப்பு. இவற்றில் நனைந்து போனதால் ஜரவாக் மக்கள், அந்தமான் தீவின் மேற்குப் பகுதிக்குப் புலம் பெயர்ந்தார்கள்.
கால ஓட்டத்தில் காட்டுக்குள் இருந்து வெளியே வந்தார்கள். 1990-ஆம் ஆண்டுகளில் ஜரவாக்கள் வெளியுலக மக்களுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்து இருக்கிறார்கள். சுற்றுலாப் பயணிகளை வழிமறித்து அவர்களிடம் உணவுப் பொருட்கள் கேட்க ஆரம்பித்தார்கள்.
அதற்குப் பதிலாகத் தங்களையே அடைமானம் வைத்து நடனமாடி வெளிநாட்டினரை மகிழ்ச்சி படுத்தினார்கள். வந்தவர்களும் சும்மா இல்லை. அழகு அழகாய்ப் படம் பிடித்து அதை அப்படியே இணையத்தில் போட்டு விளம்பரம் தேடி இருக்கிறார்கள். ஜரவாக்கள் திறந்த மேனியாய் சுற்றித் திரிபவர்கள் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். இதைப் பார்த்த அந்தமான் அரசாங்கம் வெட்கப்பட்டு கொதித்துப் போனது. கடுமையான சட்ட திட்டங்களைக் கொண்டு வந்தது. அந்த வகையில் ஜரவாக் மக்களை மிகவும் பாதுகாப்பாக வைத்து இருந்தது. வெளியே நடமாட விடாமல் ஜாகா வேலை பார்த்தது. உஹூம் நடக்கவில்லை.
நீங்க என்ன சொல்வது நாங்க என்ன கேட்பது என்று ஜரவாக் மக்கள் தாங்களாகவே வெளியுலகிற்கு வருகிறார்கள். வெளிநாட்டவருடன் நெருங்கிப் பழகுகிறார்கள். மேல் நாட்டு ஆடைகளை உடுத்துகிறார்கள். ஓரளவிற்குக் கல்வியும் கற்று வருகிறார்கள்.
இதில் வேதனையான ஒரு விசயம். ஜரவாக் மக்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைந்து விட்டது. தற்சமயம் ஏறக்குறைய 200- 400 பேர் வரை மட்டுமே எஞ்சி இருக்கிறார்கள். 2009-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி ஜரவாக் மக்கள் தொகை 341 ஆகும். இந்தப் பழங்குடிச் சமுதாயம் மிக அரிதாகி வருகிறது. இன்னும் ஒரு விசயம்.ஓர் இனத்தின் மக்கள் தொகை 1000 பேருக்குக் கீழ் குறைந்து போனால் அந்த இனத்தின் மொழி அழியும்; அந்த இனமும் அழிந்துவிடும் என்று மனிதவியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.அந்தமான் தீவுகளில் வாழும் பெரும்பாலான பழங்குடி மக்களுக்குக் கருமையான தோல். இவர்கள் அனைவருமே நெகிரிட்டோ இனத்தைச் சேர்ந்தவர்கள்.
முதன் முதலில் முதல் மனிதன் தோன்றிய இடம் ஆப்பிரிக்க கண்டம். அங்கு இருந்து தான் அந்தமான் பழங்குடியினர் வெளியேறினார்கள். சுமார் 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அந்த வெளியேற்றம் நடந்து இருக்கிறது.
அதே கால கட்டத்தில்தான் தொன்மையான தென்னிந்தியர்களும் உருவாகி உள்ளனர். நன்றாக நினைவில் கொள்ளுங்கள். தமிழர்கள் தோன்றி 65 ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன. 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் வட இந்தியர்களின் தோற்றம் தொடங்கி உள்ளது.
முன்பு காலத்தில் ஜரவாக் என்கிற பெயரைக் கேட்டாலே பலருக்கும் நெஞ்சம் பதை பதைத்துப் போகும். ஏன் என்றால் இவர்கள் கொடூர குணம் உடையவர்கள். தம் பகுதிகளில் அத்துமீறி நுழைபவர்களை விஷ அம்புகளைப் பாய்ச்சி கொன்று விடுவார்கள்.
1990-ஆம் ஆண்டுகளில் பக்கத்தில் வாழ்ந்த சக இனத்து மீனவர்களும்; இந்திய மீனவர்களும் இவர்களின் அம்புகளுக்குப் பலியாகி உள்ளனர். அவர்களின் இடங்களில் யாரும் நுழைந்துவிடக் கூடாது. அதில் மிக மிக உறுதியாக இருப்பார்கள். இருந்தார்கள்.
ஆனால் இப்போது அந்தக் கொடுமையான பழக்கம் எல்லாம் இல்லை. வெள்ளைக்காரர்களுடன் சேர்ந்து கொண்டு குடித்துக் கும்மாளம் போடுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். சும்மா ஒன்றும் சொல்லவில்லை. பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.
நீங்களும் போய்ப் பார்த்துவிட்டு வரலாமே. காசு இல்லை என்றால் பரவாயில்லை. மலேசியாவில் தான் இப்போது தடுக்கி விழுகிற இடம் எல்லாம் சுற்றுலா முகவர்கள். நீங்களும் ஒரு பத்து பேரைச் சேர்த்து விடுங்கள். இரண்டு ‘பிரி’ டிக்கெட் கிடைக்கும்.
பழங்குடி மக்களில் சிலர் இன்றும் அந்தமான் மேற்குக் கடலோரப் பகுதிகளில் நாடோடி வாழ்க்கை வாழ்கிறார்கள். இவர்களுக்கு விவசாயம் செய்யத் தெரியாது. மீன்கள், காடுகளில் கிடைக்கும் கிழங்குகள், தேன், தேங்காய், பழங்கள் ஆகியவற்றைச் சேகரிப்பது; பன்றிகளை வேட்டையாடுவது. அவையே அவர்களின் வேலை. பொழுது போக்கு எல்லாமே. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை. மான்களை மட்டும் இவர்கள் வேட்டையாடுவது இல்லை.
ஆடை இல்லாமல் காடுகளில் அலைந்து திரிந்தவர்கள். இப்போது கொஞ்சம் பரவாயில்லை. அங்கே இங்கே கொஞ்சம் கொஞ்சம் மறைத்துக் கொள்கிறார்கள்.
ஏன் என்றால் இவர்கள் அச்சம் வெட்கம் என்றால் என்ன என்று தெரியாமலேயே வாழ்ந்தவர்கள். இவர்களிடம் சமூகக் கட்டுப்பாடு எதுவுமே இல்லை. பெண்கள் யாரை வேண்டுமானாலும் கணவனாக ஏற்றுக் கொள்ள முடியும். புரியும் என்று நினைக்கிறேன். ஒரு வரையறை இல்லாமல் வாழ்ந்து இருக்கிறார்கள். இப்போதுதான் நாகரிகமாக உடைகள் அணிகிறார்கள். முன்பு எல்லாம் கிடையாது.
பனை ஓலைகளை வைத்துப் பருவ காலங்களுக்கு ஏற்றவாறு குடில் குடிசைகளை அமைக்கக் கொள்கிறார்கள். அந்தமான் காடுகளில் காட்டுச் சாம்பிராணி கிடைக்கும்.
அவற்றைச் சேகரித்து அவற்றின் மூலமாகத் தீப்பந்தங்கள் செய்து இரவு நேரங்களில் பயன்படுத்துகிறார்கள். மூங்கில் கூடைகள் செய்வதில் கெட்டிக்காரர்கள். அம்புகள் செய்வதிலும் கெட்டிக்காரர்கள். கடலில் தெரியும் மீன்களைக்கூட அம்பு எய்திப் பிடிப்பார்கள்.
இவர்களுக்குப் படகுகள் செய்யத் தெரியாது. இருந்தாலும் காடுகளில் கிடைக்கும் மூங்கில்களை வெட்டி வந்து அவற்றை அடுக்கி ஒன்றோடு ஒன்றாகப் பிணைத்து மிதவைகள் போல செய்து அதில் பயணம் செய்வார்கள்.
எப்பேர்ப்பட்ட கடல் அலைகளையும் எதிர்த்து நீந்தும் ஆற்றல் இவர்களுக்குக் கை வந்த கலையாகும். ஆண்களும் சரி; பெண்களும் சரி: நன்றாக நீந்தக் கூடியவர்கள்.
2009-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி ஜரவா மக்கள் தொகை 341 ஆகும். மிக மிகக் குறைந்த எண்ணிக்கை. ஜரவாக்கள் அறிவு கூர்மையும், தந்திரமும் மிக்கவர்கள். கொஞ்சமும் பயம் இல்லாதவர்கள். எடுத்ததற்கு எல்லாம் அம்பு தான்.
இப்போது ஜரவாக்கள் வாழும் பகுதிகளில் வேட்டையாடுதல், மீன் பிடித்தல், ஆகியவற்றை அரசாங்கம் அனுமதிப்பது இல்லை. அரசாங்கத்தின் கடும் காவல் பகுதிகள்.
வெளிநாட்டுப் பயணிகள் சுற்றுலா செல்லும் போது சாலைகளில் அவர்களின் வாகனங்களைப் பார்த்து ஜரவாக்கள் ஆனந்தக் கூச்சல் போட்டுக் கையேந்துவார்கள்.
மண்ணின் மைந்தர்கள் கையேந்துவதா என்று அரசாங்கம் அவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது. சுற்றுலாப் பயணிகள் தரும் உணவு வகைகள் அவர்களுக்கு ஒத்து வராமல் நோய்களைக் கொண்டு வருகிறது. அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறது என்று அரசாங்கம் ஜரவாக் மக்களுக்கு பொதுமக்கள் உணவு தரும் பழக்கத்திற்குத் தடையும் செய்து உள்ளது. ஜரவாக் மக்களுக்கு சிவப்பு நிறம் ரொம்பவும் பிடிக்கும். ஆகவே அந்தமான் அரசாங்கம் அவர்களுக்குச் சிவப்பு நிற துணிகள், சிவப்பு நிற ஆடைகளை வழங்குகிறது. காய்கறி உணவு வகைகளையும் இலவசமாக வழங்கி வருகிறது. தங்கும் இடங்களையும் தருகிறது. அங்கே வீடுகளையும் கட்டிக் கொடுக்கிறது.
அதனால் ஜரவாக் மக்கள் இப்போது காடுகளுக்குள் அலைந்து திரிந்து உணவு சேகரிப்பது எல்லாம் கிடையாது. சிவப்புச் சட்டை சிவப்பு சிலுவார் கலரில் தான் காடு மேடுகளில் சுற்றித் திரிகிறார்கள்.
7-ஆம் நூற்றாண்டில் அந்தமான் தீவுகள் வழியாகப் பயணம் செய்த சீனப் பயணிகளும்; 9-ஆம் நூற்றாண்டில் பயணம் செய்த அரபுப் பயணிகளும்; இந்தத் தீவுகள் கொடியவர்களின் கொலு மண்டபம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
ஆடை இல்லாமல் நிர்வாணக் கோலத்தில் காணப்படும் ஆதிவாசிகள் மனிதர்களைக் கொன்றுக் குதறித் தின்னும் பழக்கம் கொண்டவர்கள் என்றும் எழுதி வைத்து உள்ளார்கள்.ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பு இந்தப் பகுதியில் எந்த ஒரு கப்பலும் புயலில் சிக்கிக் கரை ஒதுங்கினால் அவ்வளவுதான். கப்பலில் பயணம் செய்த பயணிகளைக் காடுகளுக்குள் இழுத்துச் சென்று கொன்று விடுவார்கள்.
இருந்தாலும் மனிதர்களை இவர்கள் உண்பது இல்லை. வெளிநாட்டவர்கள் ரொம்ப காலமாகவே இவர்களுடன் உறவாட முயற்சி செய்தார்கள்.
அண்மைய காலங்களில் தான் வெற்றி கிடைத்து இருக்கிறது. காட்டு வாழ் மக்கள் இறங்கி வந்து கதை பேசத் தொடங்கி இருக்கிறார்கள். மகிழ்ச்சி அடைவோம்.
அப்படித்தான் சோழர் காலத்து அந்தமான் தமிழர்களும்; சன்னம் சன்னமாய் நாகரிக வளர்ச்சி அடைந்து வருகிறார்கள். பெரும்பாலானவர் தங்களின் பிள்ளைகளைச் சென்னைக்கு மேல் படிப்பிற்காக அனுப்பி வைக்கிறார்கள். பிள்ளைகளும் நன்றாகப் படிக்கிறார்கள். அவர்களில் சிலர் நல்ல நல்ல பதவிகளிலும் சேவை செய்கிறார்கள்.
சோகமான வரலாற்றிலும் சுகமான சுவடுகள் சுந்தரமான ராகங்களைச் சுவாசிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight + eight =