சொஸ்மா சட்டம் மறுஆய்வு செய்யப்படும்; அகற்றப்படாது

0

2012ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றங்கள் சட்டம் (சொஸ்மா) மறு ஆய்வு செய்யப்படுமே தவிர அகற்றப்படாது என சட்டத்துறை அமைச்சர் லியூ வுய் கியோங் கூறினார். இந்த சட்டத்தின் கீழ் 28 நாட்கள் விசாரணையின்றித் தடுத்துவைக்கும் சரத்து மறு ஆய்வு செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார். “நாம் விரும்பினாலோ அல்லது விரும்பாவிட்டாலோ நாட்டில் பாதுகாப்பு சட்டங்கள் நமக்குத் தேவைப்படுகிறது” என்றார் அவர். “நாம் கவனமாக இருக்காவிட்டால் பாதுகாப்பு பிரச்சினைகள் தலைவிரித்தாடும்” என அவர் தெரிவித்தார்.
இந்த சட்டத்தின் சில சரத்துகளை ஆராய பக்காத்தான் ஹராப்பான் வாக்குறுதியளித்துள்ளது. தற்போது அதற்கேற்ப செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த சரத்துகளை மறுஆய்வு செய்வது மீதான குழுவில் உள்துறை அமைச்சுடன் தாமும் இடம்பெற்றுள்ளதாக லியூ தெரிவித்தார்.
சொஸ்மா சட்டத்தை அகற்றும்படி நேற்று நாடாளுமன்றத்திற்கு வெளியே சுமார் 30 பேர் நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்து கருத்துரைத்தார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பிருப்பதாகக் கூறி சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 பேரை விடுதலை செய்யும்படி நாடாளுமன்றத்துக்கு வெளியே சுமார் 30 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen + 8 =