சொஸ்மா சட்டம் அகற்றப்படுமா? மாட்சாபு கருத்து

கடந்த 2012ஆம் ஆண்டு சொஸ்மா சட்டம் முற்றாக அகற்றப்படுவதைவிட, அந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என தற்காப்பு அமைச்சு முகமட் சாபு வலியுறுத்தினார்.
நடப்பிலுள்ள இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் 28 நாட்களுக்கு விசாரணையின்றி தடுத்து வைக்கப்படுவார்கள் என்றார் அவர்.செயலிழந்துள்ள விடுதலைப்புலி இயக்கத்திற்கு தொடர்புடையவர்கள் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்தை நாம் காவல் துறையிடம் விட்டுவிட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும் சில வேளைகளில் சொஸ்மா சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக அமானா தலைவருமான அவர் குறிப்பிட்டார்.
என்னைப் பொறுத்தவரை சொஸ்மா அகற்றப்பட வேண்டிய அவசியமில்லை. இந்த சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தவிர்க்க திருத்தங்கள் செய்தால் மட்டுமே போதுமானது”, என அவர் தெரிவித்தார்.கடந்த 1984ஆம் ஆண்டு முதல் 1986ஆம் ஆண்டு வரை தற்போது அகற்றப்பட்டுள்ள உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தாமும் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டதாக மாட் சாபு தெரிவித்தார்.
சொஸ்மா சட்டம் அகற்றப்படும் என்ற உத்தரவாதத்தை என்னால் தர முடியாது. காரணம் இந்த சட்டம் அகற்றப்படும் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
செயலிழந்துள்ள விடுதலைப்புலி இயக்கத்துடன் தொடர்புடையதாக குற்றச்சாட்டைத் தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை ஜசெக சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன், மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் ஜி.சாமிநாதன் உட்பட எழுவர் சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இந்த சட்டத்தின் கீழ் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டனர்.
போதுமான ஆதாரம் இருந்தால் சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டும்படி பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி.ராமசாமி உட்பட பலர் காவல்துறையை வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here