‘சொஸ்மா’ கைதை எதிர்த்து உணவக உரிமையாளர் வழக்கு

0

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று கூறி தம்மை கைது செய்ததை ஆட்சேபித்து 12 பேரில் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கின்றனர். கைது செய்யப்பட்ட சுங்கை பூலோவைச் சேர்ந்த அந்த 57 வயது உணவக நடத்துனர் சொஸ்மா சட்டத்தின் கீழ் தம்மை கைது செய்ததை ஆட்சேபித்து கடந்த புதங்கிழமை ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு (ஹேபியல் கார்ப்பஸ்) மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்ற நீதிபதியின் முன் நிறுத்துமாறு கோரும் மனு இது. அதிகாரிகள் சரியான காரணங்களை ஆதாரங்களைக் காட்ட வேண்டும். இல்லையென்றால் அவரை விடுவிக்க வழிசெய்யும் வழக்கு இது. கடந்த அக்டோபர் 10ஆம் புக்கிட் அமான் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்ட 7 சந்தேகப் போர்வழிகளில் தமது கட்சிக்காரரும் ஒருவர் என வழக்கறிஞர் எஸ். செல்வம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here