சொஸ்மாவுக்கு எதிராக மனு

0

தற்போது நம் நாட்டில் குறிப்பாக இந்தியர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் விவகாரம் சொஸ்மா சட்டத்தின் கீழ் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன், மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உட்பட 12 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு சுங்கை பூலோ சிறைச்சாலையில் தடுப்பு காவலில் வைத்திருப்பதாகும். இவர்கள் 2008ஆம் ஆண்டு செயல் இழந்து போன விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றஞ்
சாட்டப்பட்டு ஜாமீன் வழங்கப் படாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இது இந்திய சமூகத்தினரிடையே மனக்குமுறல்களை ஏற்படுத்தி உள்ள வேளையில், இது தொடர்பாக அந்த சட்டத்தை ரத்து செய்து சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி சட்டத்துறைத் தலைவர் டான்ஸ்ரீ டோமி தோமஸிடம் மனு வழங்கப்பட்டுள்ளது.
புத்ராஜெயாவில் உள்ள சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தில் இது சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. சட்டத்துறைத் தலைவர் டான்ஸ்ரீ டோமி தோமஸின் அத்துறையின் பொது உறவு அதிகாரி வாஸ்ரி அமாட் சுஜானி அதனைப் பெற்றுக்கொண்டார்.
சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் குடும்ப உறுப்பினர்களுடன் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இம்மனுவை வழங்கினர். அதற்கு முன்னதாக பிரதமருக்கான மனு நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்டது. அதே போன்றதொரு மனுவும் அடுத்த வாரம் பேரரசரிடம் வழங்கப்படும் என்று அவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 3 =