சொஸ்மாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் யுஎஸ் சுப்ராவின் மனு ஒத்தி வைப்பு

யுஎஸ் சுப்ரா எனப்படும் பி.சுப்ரமணியத்தின் ஆட்கொணர்வு மனுவை கூட்டரசு நீதிமன்றம் ஏப்ரல் 1க்கு ஒத்தி வைத்தது. அதே வழக்கு மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அதன் முடிவு தெரிந்த பின்னர் விசாரணையை ஏப்ரல் 1க்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையில் கூடிய நீதிபதிகள் நளினி பத்மநாதன், அப்துல் ரஹ்மாம் செப்லி, ஸலேஹா யூசோப் மற்றும் ஹஸ்னா முகமட் ஹாஷிம் கொண்ட அமர்வு அந்த மனுவின் விசாரணையை ஒத்தி வைக்க உத்தரவிட்டது.
சுப்ரமணியத்துக்கு ஆஜரான வழக்கறிஞர் செல்வம் தமது கட்சிக்காரரின் 28 நாள் தடுப்புக் காவல் கடந்தாண்டு 6ஆம் தேதி முடிவடைந்ததாகவும், அதற்கு முன்னதாக கடந்தாண்டு அக்டோபரில் அவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
அவர் மீது சுமத்தப்பட்ட குற்றவியல் சட்டம் பிரிவு130ஜெ 2017 ஜூலை 31இல் நாடாளுமன்றத்தில் திருத்தம் செய்யப்பட்டு அது அரசு இதழில் இன்னும் பதிவு செய்யப்படவில்லை என செல்வம் சுட்டிக்காட்டினார்.
மேலும், பயங்கரவாதப் பட்டியலை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்துறை அமைச்சு பரிசீலித்து பட்டியலை திருத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.
விடுதலைப் புலிகளுக்கு முகநூலில் ஆதரவு கொடுத்ததாக சுப்ரமணியத்தின் மீது சொஸ்மா சட்டத்தில் குற்றங்கள் சுமத்தப்பட்டன.
குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், ஆயுள் சிறை அல்லது 30 ஆண்டு சிறை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.
கடந்தாண்டு அக்டோபர் 10இல் அவர் கைது செய்யப்பட்ட பின்னர் குற்றத்தை ரத்து செய்ய வேண்டுமென்ற அவரின் மனு உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 3 =