சொத்துகளை அறிவிக்க 3 எம்பிக்களுக்கு கால அவகாசம்

தங்களின் சொத்துகளை அறிவிக்க சரவாக் கூட்டணி கட்சியை சார்ந்த 3 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு
கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ முகமட் ஹரிப் முகமட் யூசோப் கூறினார்.
இந்த 3 எம்பிக்களும் கால அவகாசம் கோரியதால் நாடாளுமன்றம் இவர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சில தனிப்பட்ட காரணங் களுக்காக இந்த எம்பிக்கள் சொத்துகளை அறி விக்க அவகாசம் தேவைப்படுவதால் இவர்களுக்கு மக்களவை ஆட்சேபம் எதையும் தெரிவிக்கவில்லை என்றார் அவர்.
ஆனால் தங்களின் சொத்து களை அறிவிக்க மறுக்கும் எம்பிக்களுக்கு எதிராக நடவடி க்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் நினைவுறுத்தினார்.
பக்காத்தான் ஹராப்பானைச் சேர்ந்த 139 எம்பிக்களும் சத்திய பிரமாணம் மூலம் தங்களுடைய சொத்துகளை மக்களவையிடம் அறிவித்து விட்டதாக கடந்த டிசம்பர் 5ஆம் தேதி பிரதமர் இலாகா அமைச்சர் லீயூ வுய் கியோங் கூறியிருந்தார்.
இதுவரை 169 எம்பிக்கள் தங்களுடைய சொத்துகளை அறிவித்துள்ளனர். இவர்களில் 3 பேர் தேசிய முன்னணி, 14 பேர் ஜிபிஎஸ், 3 பேர் பிஎஸ்பி பிபிஆர்எஸ் மற்றும் பிபிஎஸ் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × two =