சை லெங் பார்க் சந்தை வியாபாரிகளுக்கு பெரும் பாதிப்பு

கோவிட் – 19 வைரஸ் தாக் கத்தைத் தொடர்ந்து இங்குள்ள சை லெங் பார்க் சந்தையி லுள்ள வியாபாரிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக கெராக்கான் உதவித் தலைவர் டத்தோ பரமேஸ்வரன் கூறினார்.
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவினால் தங்களின் வியா பாரம் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளதாக தம்மிடம் புகார் செய் துள்ளதாக அவர் சொன்னார்.
நேற்று முன்தினம் இந்த சந்தைக்கு வருகை புரிந்த பத்து காவான் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளருமான அவர், இங்குள்ள வியாபாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நேரில் கண்டறிந்தார்.
இந்த வியாபாரிகளின் பிரச்சினைகள் குறித்து சை லெங் பார்க் சந்தையில் வியாபாரி கள் சங்கத்தின் தலைவர் டான் ஹோக் சை பரமேஸ்வரனிடம் விளக்கம் அளித்தார்.
இதனிடையே இங்குள்ள வியாபாரிகளுக்கு தாம் 500 முகக் கவசங்களை வழங்க விருப்பதாக அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen + 5 =