சைபர் ஜெயாவில் 1,000 சீன பிரஜைகள் கைது

0

சீன பிரஜைகளால் நடத்தப்பட்டு வந்தது என்று நம்பப்படும் மிகப்பெரிய இணையதள மோசடி கும்பலை குடிநுழைவுத் துறையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கை குறித்த அறிவிப்பு குடிநுழைவு இலாகாவின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சைபர் ஜெயாவை தலைமையகமாகக் கொண்டுள்ள இந்த மோசடி கும்பலைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கைது நடவடிக்கை குறித்து முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen + 11 =