சைட் சாடிக்கின் இளைஞர்களுக்கான கட்சி நடைமுறையில் சாத்தியப்படாது

மூவார் எம்.பி. சைட் சாடிக் அப்துல் ரஹ்மானால் ஆரம்பிக்கப் படவிருக்கும் இளைஞர்களால் வழிநடத்தப்படும் அரசியல் கட்சி பற்றி ஐயப்பாடு தெரிவிப்பதில் துன் டாக்டர் மகாதீருடன் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் நஸ்ரி அப்துல் அஸிஸும் சேர்ந்து கொண்டார்.
அண்மையில் மலாய் மெயில் ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பாடாங் ரெங்காஸ் எம்.பி.யான முகமட் நஸ்ரி 27 வயதான சைட் சாடிக்கை சூதுவாதற்ற அப்பாவி மற்றும முதிர்ச்சியற்றவர் என்றும் வருணித்தார்.
சைட் சாடிக்கின் கட்சி அரசியல் எதிர்காலம் மிகவும் சிறப்பாக இருக்காது என்று அவர் கருதுகிறார்.
சைட் சாடிக்கின் அனுபவம் வாய்ந்த மூத்த அரசியல் வாதிகளை ஒதுக்கிவிட்டு ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே பிரத்தியேகமாக உருவாக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
சைட் சாடிக்கின் கோட் பாட்டை அனைத்து இளைஞர் களும் ஏற்றுக் கொள்வார்கள் என்று கூற முடியாது.
அனைத்து அரசியல் கட்சி களும் இளைஞர் பிரிவுகளைக் கொண்டிருக்கின்றன. அம்னோ வில் உள்ள இளைஞர் அப்பிரிவை சேர்ந்த உறுப்பினர் கள் அப்பிரிவை உதறித் தள்ளிவிட்டு சைட் சாடிக் கட்சியில் சேருவார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா என்று நஸ்ரி வினா எழுப்பினார்.
இளம் தலைவர்கள் என்பதற்கு சைட் சாடிக் கூறும் விளக்கம் என்ன என்று அவர் வினவினார். சைட் சாடிக்கும் அவரின் இளம் தலைவர்களுக் கும் வயது ஏறிக்கொண்டே போகாதா என்ன என்று நஸ்ரி கேள்வி எழுப்பினார்.
தேர்தலில் சைட் சாடிக்கின் கட்சி வெற்றி பெறுவது மிகவும் கடினம் என்று முன்னாள் சுற்றுலா, கலை மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சருமான நஸ்ரி கருதுகிறார். காரணம் ஒரு தலைமுறையை நம்பி தேர்தலில் எந்தக் கட்சியும் வெற்றி பெற முடியாது.
இதற்கிடையே சைட் சாடிக் கின் கட்சி மலாய்க்காரர்களின் வாக்குகளைப் பிளவுபடுத்தும் என்ற துன் டாக்டர் மகாதீரின் கருத்தை சைட் சாடிக் நிராகரித்தார்.
நான் மலாய்க்காரர்களுக்கு மட்டும் சேவகன் அல்லன். நான் அனைத்து மலேசியர்களுக்கும் சேவகனாவேன். நான் மலாய்க் காரர்களை மட்டும் ஒன்றுபடுத்த வில்லை. நான் அனைத்து மலேசியர்களின் ஒற்றுமைக்காக பாடுபடுகிறேன் என்று அண்மையில் மலேசியா கிளினிக்கு அளித்த பேட்டியிர்ல சைட் சாடிக் கூறியிருந்தார்.
தமது கட்சி இளைஞர்களுக் காக மட்டும் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட கட்சி அல்ல என்றும் உண்மையில் தமது கட்சி இளைஞர்களால் வழி நடத்தப் படும் கட்சி என்று சைட் சாடிக் விளக்கமளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty + 1 =