செலாயாங் மொத்த சந்தை தொடர்ந்து கண்காணிக்கப்படும்

அந்நியர்கள் கோலாலம்பூரில் உள்ள செலாயாங் மொத்தச் சந்தைக்குள் உள்ளே நுழை யாமல் இருப்பதை உறுதி செய்ய அச்சந்தையைச்சுற்றி அமைந் திருக்கும் சுவர்களை கோலா லம்பூர் மாநகராட்சி மன்றம் (டி.பி.கே.எல்.) தொடர்ந்து கண்காணிக்கும்.
டி.பி.கே.எல் நேற்று வெளி யிட்ட அறிக்கையில் கூறுகை யில் அப்பகுதியில் உள்ள சொத் துக்களைப் பாதுகாப்பதற்கு ரோந்துகளும் கண்காணிப்பு களும் தொடர்ந்து மேற்கொள் ளப்படும் என்று கூறியது.
அச்சந்தையில் வியாபாரம் செய்யும் உரிமையாளர்கள் அவர்களின் பணியாட்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கோவிட் – 19 தொடர்பான பாதுகாப்பு அம்சங்கள், சமூக இடைவெளி மற்றும் சுத்தத்தைப் பேணுதல் போன்ற நடவடிக்கைகளைப் பின்பற்றுவதையும் டி.பி.கே.எல் தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்யும்.
இதைத்தவிர அப்பகுதிகளில் நுழையும் வாகனங்கள் கண்காணிக்கப்படும் மற்றும் சந்தையில் நுழையும் வாடிக்கை யாளர்களின் வெப்பநிலை சோதிக் கப்படும்.
நேற்று டெக்ஸிகள், மோட்டார் சைக்கிள்கள் தனிப்பட்ட கார் கள் உட்பட 1, 395 வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டன.1,530 நபர்களின் மேல் சுகாதார பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது.
இதற்கிடையே அலாம் புளோரா நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் ராஜா போட் சந்தையை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளை டி.பி.கே.எல். கடந்த மே 18லிருந்து நேற்று வரை மேற்கொண்டிருந்தது என்று அவ்வறிக்கை மேலும் கூறியது. ¹

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × four =