செலாயாங் மார்க்கெட் பகுதியில் 100 சிசிடிவி கேமராக்கள்

கோலாலம்பூர் செலாயாங் பெரிய மார்க்கெட் பகுதியில் அனுமதியின்றி வர்த்தகம் செய்து வந்த அந்நிய நாட்ட வர்கள் வெளியேற்றப்பட்டனர்.
அப்படி இருந்த போதிலும் இன்னும் சிலர் அப்பகுதியில் வர்த்தகம் செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கண் காணிக்க அம்மார்க்கெட்டைச் சுற்றி வேலிகள் அமைக்கப் படுவதுடன் 100 சிசிடிவி கேம ராக்கள் பொருத்தப்படும் என கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டான்ஸ்ரீ அன்வார் மூசா கூறினார்.
நேற்று அம்மார்க்கெட்டுக்கு வருகை புரிந்த அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில் அந்த மொத்த வியாபார மார்க் கெட்டில் 200 படுக்கை அறை கொண்ட தங்கு விடுதி நிர்மாணிக்கப்படும்.
அம்மார்க்கெட்டில் இரவு நேரங்களில் பணி புரிபவர்களுக் காக ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. இதற்கு மாத வாடகை 150 வெள்ளி விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.
1 மணி நேரத்திற்கு மேல் அப்பகுதியைச் சுற்றிப் பார்த்த அமைச்சர் தற்பொழுது அந்நிய தொழிலாளர்கள் அங்கு இல்லாததால் அது இப்போது சுத்தமாக உள்ளதாக அவர் கூறினார்.
அவ்வருகையின் போது அமைச்சருடன் கோலாலம்பூர் மாநகர் மன்ற டத்தோ பண்டார் டத்தோ மஹாடி சே ஙா உடன் வந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here