செய்தியை அம்பலப்படுத்தியதால் பதவியில் இருந்து நீக்கப்பட்டேன்

0

மாநிலத்தில் உள்ள பெர்சத்து, பிகேஆர் தலைவர்கள் சிலர் பக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தை அமைக்கும் சதித் திட்டத்தை அம்பலப்படுத்தியதால், மலாக்கா பிகேஆர் தொடர்புக் குழு இயக்குனர் பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்டதாக ஜி.ராஜேந்திரன் கூறினார்.

மலாக்கா பிகேஆர் தொடர்புக் குழு தலைவர் பதவியில் இருந்து தாம் நீக்கப் பட்டது தொடர்பான கடிதத்தை நேற்று காலையில் தாம் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த கடிதத்தில் மலாக்கா பிகேஆர் தலைவர் ஹலிம் பாச்சேக் கையெழுத்திட்டிரு ந்ததாக நேற்று அவரை மலேசியா கினி தொடர்பு கொண்டபோது தெரிவித்தார். மலாக்கா முதலமைச்சர் அட்லி ஷஹாரியை கவிழ்க்க பிகேஆர், பெர்சத்து தலைவர்கள் அம்னோவுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டி வருவதாக கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி தாம் வெளியிட்ட ஒரு பத்திரிகை அறிக்கையைத் தொடர்ந்து மாநில பிகேஆர் தலைமைத்துவ மன்ற வாட்ஸ் ஆப் குழுவில் இருந்தும் தாம் நீக்கப்பட்டதாக அவர் சொன்னார். இந்த விவகாரத்தில் மாநில பிகேஆர் தலைவர் அல்லது மாநில பிகேஆர் தலைமைத்துவம் சம்பந்தப் பட்டிருப்பதாக நான் கூறவில்லை. “பிகேஆர் தலைவர்கள் சிலர் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர் என் பது எனது தனிப்பட்ட கருத்தாகும்” என ராஜேந்திரன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 − 1 =