செம்பனை ஏற்றுமதிக்கு ஆப்பிரிக்க நாடுகள் மலேசியாவை அடையாளம் கண்டுள்ளன

0

தனது செம்பனை ஏற்றுமதிக்கு ஆபிரிக்க நாடுகளை மூலப்பொருள் தொழில்துறை அமைச்சு அடை யாளம் கண்டுள்ளதாக அதன் அமைச்சர் திரேசா கொக் கூறினார்.
ஆப்பிரிக்கா கண்டம் 120 கோடி ஜனத்தொகையைக் கொண் டது. அங்கு சில நாடுகள் துரித பொரு
ளாதார வளர்ச்சியைக் கண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் செம்பனை எண்ணெய் மிக ஏற்புடைய சமையல் எண்ணெய் என அவர் சொன்னார்.
இந்த ஆப்பிரிக்க நாடுகளில் மலேசிய செம்பனை எண்ணெய்க்கு பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
கடந்த வாரம் தமது எத்தியோப் பியா பயணத்தின் போது அந்த நாட்டின் துரித பொருளாதார வளர்ச்சியைக் கண்டு தாம் அதிர்ச் சியடைந்ததாக அவர் தெரிவித்தார்.
100 மில்லியன் மக்கள்தொகை யைக் கொண்ட அந்த நாட்டின் பொரு
ளாதார வளர்ச்சி 9.0 விழுக்காடு மற்றும் 11 விழுக்காடு உயர்வு கண் டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மலேசியாவின் செம்பனைக்கு எத்தியோப்பியாவில் அபரிமித வாய்ப்பு இருப்பதாக திரேசா குறிப்
பிட்டார். கடந்தாண்டு எத்தியோப் பியா 149,435 டன் செம்பனையை இறக்குமதி செய்துள்ளது. மேலும் 457.17 மில்லியன் வெள்ளி
மதிப்பிலான செம்பனை
அடிப்படையிலான பொருட்களையும் இறக்குமதி செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 4 =