செம்பனை எண்ணெய்க்குத் தடை – சிறு தோட்டக்காரர்கள் பெரிதும் பாதிப்படைவர்

0

இந்தியா மலேசியாவின் செம்பனை எண்ணெய்க்கான தடையை விதித்தால், சிறு தோட்டக்காரர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் என துன் மகாதீரின் பத்திரிகை ஆலோசகர்  காடிர் ஜாசின் தெரிவித்தார்.

காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவைப் பற்றிய மகாதீரின் சாடல் அமெரிக்கா -சீனாவுக்கிடையிலான நலிந்திருக்கும் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதிக்கும் என அவர் குறிப்பிட்டார்.

மகாதீரின் பேச்சினால் மலேசிய பொருள்களுக்குத் தடை விதிக்க வேண்டுமென இந்தியாவில் அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

செம்பனை எண்ணெயோடு மற்ற இறக்குமதிக்கும் தடை வரலாம் எனவும் சொல்லப்படுகிறது.

நாட்டில் பெரிய செம்பனை நிறுவனமான பெல்டாவும் அதன் குடியேற்றவாசிகளும் பெரிதும் பாதிப்படைவர். இதனை அரசு நன்றாகவே தெரிந்திருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − 9 =