செப்.1 முதல் பள்ளிகள் கட்டம் கட்டமாகத் திறக்கப்படும்

கற்றல்-கற்பித்தல் நடவடிக்கைகளை நேரடியாக மேற்கொள்ளும் வகையில் வரும் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி தொடங்கி பள்ளி மீண்டும் கட்டம் கட்டமாகத் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்தது. இதில் தற்போது மேற் கொள்ளப்பட்டு வரும் வீட்டிலேயே கற்றல்-கற்பித்தல் நடவடிக்கை வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும். இம்முடிவு நடப்பிலுள்ள கோவிட் தொற்று நிலையைக் கருத்தில் கொண்டது மட்டுமின்றி சுகாதார அமைச்சு மற்றும் தேசியப் பாதுகாப்பு மன்றத்துடன் (எம்.கே.என்.) இணைந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து எடுக்கப்பட்டது. இந்த உறுதிப்பாடு அனைத்து அரசுப் பள்ளிகள் அரசு உதவிப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்வி அமைச்சில் பதிந்துக் கொண்டுள்ள அனைத்து உயர்கல்வி மையங்களுக்கும் பயன்படுத்தப்படும் என்று ஓர் அறிக்கையில் அமைச்சு குறிப்பிட்டது. இதனிடையே பள்ளி ஆசிரியர் கள், நிர்வாகத்தினர், ஊழியர்கள் ஆகியோருக்கானத் தடுப்பூசிச் செலுத்தும் விகிதம் தொடர்ந்து அதிகரிக்கப்படுவதை உறுதிச் செய்ய கோவிட் நோய்த்தடுப்பு நடவடிக்கை அமைப்புடன் (சி.ஐ.டி.எஃப்.) இணைந்து ஒத்துழைக்கப்படும் என்று அமைச்சு தெரிவித்தது. இதில் கடந்த வெள்ளிக்கிழமை வரை 253,366 ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் (61.3ரூ), 10,876 பள்ளி ஊழியர்கள் (46.33ரூ) ஆகியோருக்கு முதல் மருந்தளவுத் தடுப்பூசிச் செலுத்தப்பட்டது. இந்தத் தடுப்பூசிச் செலுத்தும் விகிதத்தைக் கருத்தில் கொண்டு நேரடியாகக் கற்றல்-கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வரும் செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து பள்ளிகளைத் திறக்க அமைச்சு முடிவெடுத்து விட்டது. எனினும், ஒருவேளை இத்தேதியில் மாற்றங்கள் ஏதும் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் எம்.கே.என். மற்றும் சுகாதார அமைச்சின் ஆபத்து மதிப்பீடுகளைக் கல்வி அமைச்சு கருத்தில் கொள்ளும். இதுகுறித்து ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் முன்கூட்டியே அறிவிக்கப்படுவதோடு பள்ளிகளில் மீண்டும் நேருக்கு நேர் கற்றல்-கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி பள்ளித் திறப்பதற்கு 1 வாரத்திற்கு முன்பு அறிவிக்கப்படும். கல்வி அமைச்சு தொடர்ந்து மிகச் சிறந்தவற்றைச் செய்வதில் எப்போதும் உறுதியாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × four =