செப்டம்பர் மாதத்தில் இந்தியா 393,000 டன் செம்பனை எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது

செப்டம்பர் மாதத்தில் மலேசியாவிலிருந்து இந்தியா 392,891 டன் செம்பனை எண்ணெயை இறக்குமதி செய்ததாக ஒரு தொழில்துறை குழு நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதில் 381,079 டன் கச்சா செம்பனை எண்ணெய் (சிபிஓ) மற்றும் 11,812 டன் கர்னல் கச்சா எண்ணெய் (சிபிகேஓ) ஆகியவை அடங்கும்.
கடந்த மாத புள்ளிவிவரங்களின்படி, ஆகஸ்ட் மாதத்தில் மலேசியாவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட செம்பனை எண்ணெயின் சதவீதம் 14ஆக உயர்ந்துள்ளது என்று வர்த்தக குழு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் மொத்த சமையல் எண்ணெய் இறக்குமதியில் 643,994 டன் செம்பனை எண்ணெயிலும் 400,248 டன் மற்ற தாவர எண்ணெயிலும் ஆனது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + one =