செப்டம்பரில் 15ஆவது பொதுத் தேர்தல்; கெராக்கான் தயாராகி வருகிறது

0

வரும் செப்டம்பரில் நாட்டில் 15ஆவது பொதுத் தேர்தல் நடைபெறும் என எதிர் பார்க்கப்படுவதாகவும் கெராக்கான் அதற்கு தயாராகி வருவதாகவும் அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ டோமினிக் லாவ் கூறினார். இந்த திடீர் தேர்தலைச் சந்திக்க கெராக்கான் தனது தேர்தல் இயந்திரத்தை முடுக்கிவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நாட்டின் அண்மைய அரசியல் நிலவரத்தைக் கருத்தில் கொண்டு எந்த நேரத்திலும் திடீர் தேர்தல் நடைபெறலாம் என்பதால் தேர்தலைச் சந்திக்க தயாராகும்படி அனைத்து மாநில தலைவர்களுக்கும் தாம் உத்தரவிட்டுள்ளதாக அவர் சொன்னார்.
அடுத்த வாரம் நடைபெற விருக்கும் கெராக்கான் உச்சமன்றக் கூட்டத்தில் தொகுதி ஒதுக்கீடு வேட்பாளர்கள் குறித்து விவாதிக்கப்படும் என அவர் சொன்னார். வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் கெராக்கானின் முன்னணி மாநிலமாக பினாங்கு மாநிலம் விளங்கும் என டோமினிக் லாவ் குறிப்பிட்டார். இதனிடையே பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினிக்கு கெராக்கான் தனது பிளவுப்படாத ஆதரவை வழங்கி வரும் என அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × four =